தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு!- வீடியோ

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு!- வீடியோ

மிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப் பட்டதை அடுத்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப் பட்டார். இந்நிலையில் சென்னை ராஜ்பவனில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ரவிக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட ஆர்.என்.ரவி ராஜ் பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வணக்கம் என தமிழில் கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கிய புதிய ஆளுநர் என்.ஆர். ரவி, பழம்பெரும் கலாசாரம் கொண்ட தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன்.

என்னால் முடிந்த அளவுக்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்துக்காக உழைக்க உள்ளேன். தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும் நான் முயற்சி செய்ய இருக்கிறேன்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது. ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உள்பட்டது. அதற்கேற்ப செயல்படுவேன். அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பேன். தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை.” என்றார்

error: Content is protected !!