சர்வதேச அளவில் ‘கொட்டேஷன் கேங்’ என்றழைக்கப்படும் பணத்துக்காக சட்ட விரோத செயல்களைச் செய்யும் குழுக்களின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘கொட்டேஷன் கேங்’ என்ற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை Filminati Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் காயத்ரி சுரேஷ், விவேக் கே.கண்ணன் மற்றும் Sri Gurujothi Films நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.விவேகானந்தன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பான் இந்திய படமாக பல மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி மற்றும் சாரா அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அஷ்ரப் மல்லிசேரி, ஜெய பிரகாஷ், அக்ஷயா, பிரதீப் குமார், விஷ்ணோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் என்று பல்வேறு மொழி நடிகர், நடிகையரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டீஸரில் வெளியான காட்சிகளில் அதீத வன்முறையும், வித்தியாசமான கேஸ்டிங், மேக்கப், ஆக்சன் காட்சிகள் என்று படம் வேறுவிதமான உணர்வைத் தந்திருக்கிறது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் விவேக் கே.கண்ணன் பேசும்போது, “இந்தக் கதையை நாங்கள் ஓடிடிக்கான படமாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதை பின்புதான் உணர்ந்தோம். இந்தப் படம் கேங் வார் குறித்தானது கிடையாது. ஆனால் உணர்ச்சி மிகுந்த கதையாக இருக்கும். பணத்துக்காக கொலை செய்யக் கூடிய கொலைகாரர்கள் பற்றிய கதை இது. ஆக்ஷன் பற்றிய கதையும் கிடையாது. ஆனால் அங்கிருக்கும் வாழ்க்கையின் உணர்ச்சிகளைக் கொண்டது.
சென்னை, மும்பை மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் ஹைப்பர்லிங்க் எமோஷனல் ட்ராமாவாக உருவாக்கி உள்ளோம். இந்த கதையை கோவிட் காலத்திலும் படமாக்கி உள்ளோம். ஏற்கனவே, நான் பிரியாமணியுடன் ஒரு புராஜெக்டில் வேலை செய்ய வேண்டி இருந்தது. நான் எப்போது இந்த கதையை அவரிடம் சொன்னேனோ அவருக்கு கதை பிடித்துப் போய் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதேபோல, ஜாக்கி ஷெராப் கதைக்கு உள்ளே வந்ததும் இது பான் இந்தியா படமாக மாறிவிட்டது. படத்தில் சன்னி லியோன் தீவிரமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அர்பணிப்பும் கடின உழைப்பும் மிகச் சிறந்ததாக இருந்தது.
சாரா அர்ஜூன் இதுவரை கண்டிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் மற்றொரு ஹை லைட் ட்ரம்ஸ் சிவமணியின் இசைதான். அவர் இந்தப் படத்திற்காக தனது சிறப்பான இசையையும், கடும் உழைப்பையும் கொடுத்துள்ளார். அதை டீசரின் இசையிலேயே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்”. என்றார்.
இப்படத்தின் இசையமைப்பாளர் சிவமணி பேசும்போது, “நாங்கள் இருவருமே வட சென்னையை சேர்ந்தவர்கள். அதனால், அவரது பார்வையை என்னால் இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய ஏரியாவில் இது போன்ற கேங் மற்றும் அதன் சண்டைகளைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அதனால், எங்களுடைய லோக்கல் இசை மற்றும் அதன் தன்மையை சேர்த்துள்ளோம். இந்தக் கதைக்கு அது தேவையான எமோஷனைக் கொண்டு வந்துள்ளது. இந்தக் கதையில் இசை முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது…” என்றார்.
படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…
பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…
நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…
இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…
இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…
This website uses cookies.