October 25, 2021

கேரளாவுக்கு 35 கோடி ரூபாய் நிதியுதவி -கத்தார் மன்னர் அறிவிப்பு!

கடவுளின் தேசம் என்றும்… கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலம் எனவும் சமூக பொருளாதார மட்டத்தில் உயர்ந்து நிற்கும் ஸ்டேட் என்பதாகவும்… எளிமையான அரசியல்வாதிகளை கொண்ட கேரள மாநிலம், கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கையின் கோரதாண்டவத் துக்கு இறையாகி தத்தளித்து வருகிறது. ஏறத்தாழ 100 ஆண்டுகளில் பெய்யாத மழை இப்போது பெய்து சுமார் ரூ.19 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 2¼ லட்சத்துக்கும் மேலான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். பலத்த மழை காரணமாக கேரளா தொடர்ந்து தவித்து வருகிற நிலையில், முதல்- அமைச்சர் நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் உதவுமாறு அந்த மாநில முதல்- அமைசர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வரும் நிலையில் கத்தார் மன்னர் அமீர் ஷேக் தமீம் பின் அல்தானி 35 கோடி ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளார்.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி மிதமாகத் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, படிப்படியாக அதி கரித்து விஸ்பரூபம் எடுத்தது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது, மதகுகள் திறக்கப் பட்டன. மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவால், கட்டடங்கள் மரங்கள் விழுந்துள்ளது. மேலும் கடந்த 10 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் மாநிலத்தின் பெரும்பகுதியான மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 350க்கும் மேற்பட் டோர் வெள்ளத்துக்குப் பலியாகி இருக்கிறார்கள், ஏராளமானோரைக் காண வில்லை. 3 லட்சத்துக் கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கேரள மக்களுக்கு உதவ பல்வேறு மாநில அரசுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பல்வேறு மாநில அரசுகள் சார்பில் நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உணவுப் பொருட்களும், உடைகளும், மருந்துகளையும், அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தைச்சேர்ந்த ஏராளமான மக்கள் அரபு நாடுகளில் பணியாற்றி வருவதால், அந்த மாநிலத்தின் பாதிப்பை அறிந்த கத்தார், ஐக்கிய அரபு அமீரக அரசுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. கேரளாவின் வெள்ள பாதிப்புகளை அறிந்த ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு அரசின் துணை அதிபர் ஷேக் அல் மக்தும் ட்விட்டரில் மலையாளம், ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவில், கேரள மக்கள் எங்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அதுமட்டுமல் லாமல் இந்தியர்களின் வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தையும் பகிர விரும்பகிறோம். இதற்காக தனிக் குழு அமைத்து, ஒவ்வொரு உதவி செய்ய கேட்டு இருக்கிறோம் எனத் தெரிவித்தார். இதற்குப் பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், கத்தார் நாட்டு அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக ரூ.35 கோடி யை அளிப்பதாக அறிவித்துள்ளது.மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துள்ளது. இது குறித்து கத்தார் நாட்டு பிரதமர் அப்துல்லா பி நசீர் பின் கலீபா அல் தானி ட்விட்டரில் இன்று கூறுகையில், இளவரசர் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக 50 லட்சம் அமெரிக்க டாலர் கள்(ரூ.35கோடி) நிவாரணமாக அறிவித்துள்ளார். வெள்ளத்திலும், மழையிலும் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு கத்தார் அரசு சார்பில் ஆறுதல்களையும், இரங்கலையும் தெரிவிக் கிறோம். கத்தார் நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவியாக இருந்த மக்கள் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.