உண்மை உடனுக்குடன் என்ற கொள்கை முழக்கத்துடன் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நமது புதிய தலைமுறை அலைவரிசை செய்திப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதை புதியதலைமுறை கடமையாகவும் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெண்கள் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் சக்தி என்ற பெயரில் சாதனைபடைத்த பெண்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு செய்கிறது.
இந்த சமூகம் தளைத்தோங்க சரிநிகர் பங்களிப்பை ஆற்றிவரும் பெண்களை அடையாளம் கண்டு தலைமை, திறமை, துணிவு, புலமை, கருணை மற்றும் வாழ்நாள் சாதனை என்ற ஆறு தலைப்புகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளை தேர்வு செய்து சக்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான விருது விழா சென்னை வர்த்தக மையத்தில் வரும் மார்ச் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 30 மணியளவில் நடைபெற இருக்கிறது. ஆன்றோர்கள் சான்றோர்கள் திரைப்பட பிரபலங்கள் கல்வியாளர்கள், போன்ற அனைத்துத் துறைசார்ந்த ஆளுமைகளின் முன்னிலையில் நடைபெற இருப்பதால் இந்த விருது விழாவினை சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
சக்தி விருது நிகழ்ச்சி மார்ச் மாதம் எட்டாம் நாள் மகளிர் நாளில் நமது புதிய தலைமுறையில் ஒளிபரப்பப்படும். பங்கேற்க விரும்புகிறவர்கள் அதற்கான அனுமதி சீட்டினை புதிய தலைமுறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
சினிமாக்கள் நம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பலமானது. அதனை உணர்ந்த கலைஞர்கள், உண்மைக் கதைகளையும், உண்மைச் சம்பவங்களையும் வைத்து…
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2ம் பாகம்…
இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த போர்களில் அதற்கு காரணம் யார் என்று பார்த்தால் கண்டிப்பாக அதன் பின்னால் அமெரிக்கா…
1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிண்டியில் 160…
யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள்…
This website uses cookies.