September 20, 2021

புரியாத புதிர் – திரை விமர்சனம்!

சமூக வலைத்தளங்களில் நடக்கும் சைபர் குற்றங்களுக்கு இணையாக எக்கச்சக்கமாக நடைபெறுபவை, செல்போன் குற்றங்கள்தான். முகம் தெரியாத யாரோ ஒருவர் நம்மில் ஒருவரின் அந்தரங்க பேச்சு மற்றும் உடலை பதிவு செய்து கொளவதும் அவை வேறோருவர் மூலம் இணையத்தில் உலா வருவதும் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. அதிலும் ஹைடெக்காகி போன இக்காலத்தில் சகலரும் பயன்படுத்தும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களின் வளர்ச்சிக்கு பிறகு சொல்ல வே வேண்டாம். ஆனால் இதன் பாதிப்பை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே யோசித்து ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் உருவான படம்தான் ‘புரியாத புதிர்’

அதாவது சுமார் நாலு வருஷங்களுக்கு முன்னால் ‘சூது கவ்வும்’ & ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்களை முடித்த கையோடு, அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மெல்லிசை’ என்ற டைட்டிலில் நடிக்க கமிட் ஆனார் நடிகர் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை காயத்ரி ஒப்பந்தமான பின், டிசம்பர் 2013இல் தொடங்கிய படப்பிடிப்பு முழுவீச்சாக ஒரே ஷெட்யூலில் 50 சதவிகிதம் முடிக்கப்பட்டது. அதன் பின்னர், நிதி நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதானது. இரண்டு ஆண்டுகள் கழித்து, ‘JSK ஃபிலிம் கார்ப்பரேஷன்’ சதீஷ் குமார் இந்த படத்தை வாங்கி கொஞ்சம் மெருக்கேற்ரும் நோக்கில் ஜஸ்ட் ஒரு நாள் எக்ஸ்ட்ராவாக ஷூட்டிங்கெல்லாம் நடத்தி. கூடவே படத்தின் தலைப்பையும் ‘புரியாத புதிர்’ என மாற்றிய பிறகும். பல்வேறு சிக்கல்களையும், தடங்களையும் தாண்டி போன வெள்ளியன்று ரிலீஸானது இப்படம்.

மியூசிக் டைரக்டராகும் லட்சியத்தோடு இருக்கும் விஜய் சேதுபதி ஒரு இசைக் கருவிகள் விற்கும் கடையில் பணி புரிகிறார். அங்கு வரும் மியூசிக் டீச்சரான காயத்ரி-யை கண்டதும் காதல் ஆகி ஃபாலோ அப் நடக்கிறது. இதனிடையே, விஜய் சேதுபதியின் போனுக்கு காதலி (காயத்ரி) யின் அந்தரங்க புகைப்படம் ஒன்று வருகிறது. அதில் ஷாக் ஆகி அந்த எண் யாருடையது என்று கண்டறிய முயற்சிக்கும். போதே ஜவுளிக்கடையின் உடை மாற்றும் காட்சியும் வீடியோவாக அவரது போனுக்கு வருகிறது. இதனால் டென்ஷனான விஜய் சேதுபதியிடம் பேசி நடந்ததை அறிந்து தற்கொலைக்கு முயலும் காயத்ரியைக் காப்பாற்றி தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார்.

இதனிடையே விஜய் சேதுபதியின் நெருங்கிய 2 நண்பர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, மற்றொருவர் போதைப்பொருள் வழக்கில் அரெஸ்டாகி ஜெயிலுக்கு போய் விடுகிறார். ஆக தன் காதலி, நண்பர்களைக் குறி வைத்துத் செல் போன் மூலம் தாக்கும் அந்த மர்ம ஆசாமி யார்? என்பதை விஜய் சேதுபதி கண்டறிய பாடு படும் விதமும், அதன் பின்னணியும்தான் ‘புரியாத புதிர்’.

தற்போதைய ஹாட் டாபிக்கில் ஒன்றான புளூ வேல் அபாய விளையாட்டு டைப்பில் கொஞ்சம் இண்டர்ஸ்டிங்காக போகும் கதையின் முடிவில் கொஞ்சம் அதிருப்தி ஏர்படுகிறது என்றாலும் நடக்கும் தவறுக்கு இதுதான் பிராய சித்தம் என்பதுடன் இடையிடையே வரும் டயலாக்குகளான ‘சுவாரஸ்யமா வாழ்றது மட்டும், வாழ்க்கை இல்ல… நிம்மதியாவும் வாழணும்…’, ’தப்பு செய்யறது மட்டுமல்ல..தப்பு நடக்கறதை தடுக்காம இருக்கறதும் தப்புதான்’ என்ற சிந்தனையை கொஞ்சம் அழுத்தமாக்வே சொல்ல முயன்று ஜெயித்திருக்கிறார் இயக்குநர். அதிலும் விஜய்சேதுபதி சொன்னது போல் படத்தில் கிளாமர் சீன்கள் காட்ட வேண்டிய காட்சிகளில் கூட அதை தவிர்த்து கதையை நேர்த்தியாக அதிலும் குடும்பத்தோடு போய் பார்க்கும் வகையில் உருவாக்கியதற்கு தனி சபாஷ்

மார்க் ; 5 / 3