காது கேளாதவர்களுக்கு உதவும் நோக்கில் செல்லிடப்பேசி செயலி!

காது கேளாதவர்களுக்கு உதவும் நோக்கில் செல்லிடப்பேசி செயலி!

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று காது கேளாதவர்களுக்கு உதவும் நோக்கில் செல்லிடப்பேசி செயலி ஒன்றை வடிவமைத்துள்ளது. q+ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலியை ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிளே ஸ்டோர், ஐ டியூன்ஸ் மூலம் இருந்து பதிவிறக்கம் செய்து, Earphones மூலம் காது கேளாதவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். புனே வில் இயங்கி வரும் quadio என்ற நிறுவனம் காது கேளாதவர்களுக்காக இந்தச் செயலியை அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.

tec jy 29

தொலைக்காட்சியைக் காணும்போது இந்தச் செயலியைப் பயன்படுத்தி ஒலியைக் கேட்கலாம். இது தவிர, உணவகத்தில் இருக்கும்போது, வாகனம் இயக்கும்போது என பல்வேறு சூழ்நிலைகளிலும் இந்தச் செயலி காது கேளாதவர்களுக்கு ஒலியைக் கேட்கப் பயன்படும்விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காடியோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நீரஜ் டுடெல், “”நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 12 கோடிக்கும் அதிகமானோருக்கு காது கேட்காத பிரச்னை உள்ளது. அவர்களுக்கு உதவும் விதமாக இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான காது கேளாத கருவியில் உள்ள வசதிகளைவிட இந்தச் செயலியில் அதிக வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

error: Content is protected !!