புதுச்சேரியில் அனைத்து அரசு ஊழியர்களும் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் பாரம்பரிய காதி உடை, கைத்தறி ஆடை அணிந்து அலுவலகத்துக்கு வரவேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஹிரண் வெளியிட்ட உத்தரவில், புதுச்சேரியில் மாதந்தோறும் 15ம் தேதியன்று அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகளும் பொதுமக்கள் குறைகளை கேட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 15ம் தேதி விடுமுறையாக இருந்தால் அடுத்த பணிநாளில் குறைகளை கேட்டு தீர்வு காணும் கூட்டத்தை நடத்தவேண்டும்.
அன்றைய நாளில் தங்கள் அறையில் அதிகாரிகள் இருந்து நாள்முழுவதும் மக்கள் குறைகளை கேட்டு தீர்வு காணவேண்டும். அந்நாளில் துறைசார் கூட்டங்கள் நடத்தக்கூடாது. ஏதேனும் முக்கியத்துவம் இருந்தால் இதில் விலக்குண்டு. குறைகளை கணினியில் பதிவு செய்து தனியாக இணையத்தில் பதிவேடு பராமரிக்கவேண்டும். குறைகளை கேட்க போதிய ஏற்பாடுகளை துறையினர் செய்ய வேண்டும். அத்துடன் குறைகளுக்கு தீர்வுகாணும் கால அளவையும் மனுதாரருக்கு குறிப்பிட வேண்டும்.
மனுதாரருக்கான உரிய பதிலையோ, தீர்வையோ 30 நாட்களுக்குள் அளிப்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளை பாரம்பரிய காதி அல்லது கைத்தறி துணி அணியும் நாளாக துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த நாளில் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரிய உடை, கைத்தறி ஆடை அணிந்து அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…
பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…
நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…
இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…
இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…
This website uses cookies.