October 16, 2021

கபடி நம் பாடப்புத்தகத்தோடு தன் வரலாற்றை முடித்துக்கொள்ளுமோ? -பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் வேதனை

முன்னணி இயக்குநர்களின் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், சினிமா மட்டும் இன்றி சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தஞ்சை யில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற வீரர்களை துரை சுதாகர் கெளர வித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் டெல்டா சாம்பி யன்ஸ் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் கபடி தொடர் நடத்தப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட அணிகள் இந்த தொடரில் கலந்துக் கொண்டது.இத்தொடரில் சேலத்தை சேர்ந்த சவன் மேன் ஆர்மி அணி முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை ஸ்போர்ட்ஸ் கிளப் வடுவூர் அணி யினர் வென்றனர். முதல் பரிசு வென்ற அணியினருக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில், திரைப்பட நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று கூடி இருந்தவர்களிடம் சும் போது, “நாம் ‘சடுகுடு’ என்றும் அழைக் கும் கபடி, நம் தமிழகத்தில் பிறந்தது. ‘கபடி’ என்ற சொல்லே, ‘கை பிடி’ என்ற தமிழ்ச் சொற்களில் இருந்து உருவானதுதான். இன்றைக்கு கபடி விளையாட்டு ஒரு சர்வதேச விளையாட் டாக வளர்ந்து வருவது நமக்கெல்லாம் பெருமை. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், பீகார், பஞ்சாப் ஆகியவற்றின் மாநில விளையாட்டு கபடி ஆகும். வங்காளதேசத்தின் தேசிய விளையாட்டு கபடிதான்.

கபடி விளையாட்டு தமிழர்களின் பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. வீரத்தோடு தொடர்பு டையது. நம் கலாச்சாரத்தின் உயிர் செல்கள் ஒவ்வொன்றாய் மரித்து போய் உதிர்ந்து கொண்டிருக் கும் காலக்கட்டத்தில், கபடியும் அப்படிப்பட்ட கோமா நிலையில்தான் ஊசலாடிக் கொண்டிருக் கிறது.  இன்னும் சில வருடங்கள்… அல்லது அடுத்தத் தலைமுறையில் கபடி நம் பாடப்புத்தகத் தோடு அதன் வரலாற்றை முடித்துக்கொள்ளுமோ என்று கவலை வருகிறது..

கபடியைப் பற்றி ஓர் தவறான புரிதல் நம் சமூகத்தில் நிலவுகிறது. இது நாட்டுப்புறங்களில் விளையாடப்படும் விளையாட்டு போலவும், ஜல்லிக்கட்டுப் போன்ற ஆபத்தான விளையாட்டு போலவும் இதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும் எனவும் மேலெழுந்தவாரியாக ஓர் எண்ணம் சமகால நகரப்புற மக்களிடம் இருக்கிறது. குறிப்பாக படித்தவர்கள் மத்தியில்…

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் சினிமா போஸ்டர்களுக்கு இணையாக கபடிப்போட்டியின் போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும்.முதல் பரிசு ரூ 555.. இரண்டாம் பரிசு ரூ 333.. மூன்றாம் பரிசு ரூ111. ஆனால் இங்கே பரிசுத்தொகை முக்கியமில்லை. விளையாடவேண்டும். ஜெயிக்கவேண்டும். அவ்வளவுதான்.

சிறுவயதில் கபடி எனக்கு உயிர் மூச்சு. எனக்கு தெரிந்த ஒரே விளையாட்டும் அதுதான். பள்ளி முடிந்து வீடு வந்து சேர்வதற்குள் பள்ளியின் விளையாட்டு களத்தில் ஒரு ஆட்டம், ஆற்று மணலில் ஒரு ஆட்டம் என்று இரண்டு ஆட்டம் போட்டுவிடுவோம். இரண்டும் பக்கத்து ஊர் பசங்களுடன். பிறகு வீட்டில் புத்தகப் பையை தூக்கி எறிந்துவிட்டு பக்கத்து தெரு பசங்களுடன் ஒரு ஆட்டம்.

சில நேரங்களில் கால் முட்டி பெயர்ந்து விடும். கைகளில் நெஞ்சில் சிராய்ப்புகள் ஏற்படும். சில நேரங்களில் மண்டை கூட உடையும். அடுத்த நாள் குளத்து தண்ணீரில் குளிக்கும்போது ஏற்படும் எரிச்சலை வைத்துதான் எங்கெங்கு அடிபட்டிருக்கிறது என்பது தெரியவரும். அதற்காக ஒருபோதும் கவலைப் பட்டதும் இல்லை.

புழுதி பறக்கும் களத்தில் குருதிச்சொட்ட விளையாடிய நினைவுகள் இன்னும் இருக்கிறது. கோடைக் காலங்களில் இதுதான் எங்கள் பொழுதுப்போக்கு. நாலு பேரு ஒன்னா சேந்தா, நடுவுல ஒரு கோடு போட்டு , அணிக்கு ரெண்டா பிரிச்சி ஆசையோடு விளையாடிய ஞாபகங்கள்……

மண்ணோட வாசமும் ருசியும் ஒன்னா கலந்ததால சோறு தண்ணியும் மறந்து விடும்..சுகமும் துக்கமும் மறத்து போகும். மட்டையும் பந்தும் தேவையில்ல..அரைக்கால் சட்டையும் அழுக்கு பனியனும் இருந்தாலே போதும் எங்களுக்கு.. புல்தரையும் போர்க்களமாகும்…வயல்வெளியும் மைதானமாகும்..” என்று சொன்னதை கேட்டு அங்கிருந்த கபடி வீரர்கள் மெய் சிலிர்ந்து போனார்களாம்.

பின்னர், வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பையை தனது கையால் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கி, அவர்களை கெளதவித்த நடிகர் துரை சுதாகர், டெல்டா சாம்பியன்ஸ் கபாடி கழகம் மற்றும் ஆம்பலாப்பட்டு கிராமவாசிகளுடன் இணைந்து விழாவினை சிறப்பித்தார்.