September 25, 2021

ட்ரம்ப் தாத்தா அதிபரானதைப் பிடிக்காமல் 60 நாடுகளில் போராட்டம் + பேரணி + கிளர்ச்சி

அமெரிக்காவின் 45-வது அதிப ராக டொனால்டு ட்ரம்ப், வாஷிங் டனில் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். அப்போது பேசிய அவர், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கும். எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அமெரிக்காவின் நலனுக்கு முதலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் நேற்று தனது முதல் நாள் பணிகளைத் தொடங்கினார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காலத்தின்போது அதிபர் அலுவலகத்தில் இருந்த பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சிலின் மார்பளவு சிலை அகற்றப்பட்டது. புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்றவுடன், வின்சென்ட் சர்ச்சிலின் சிலை நேற்று மீண்டும் அலுவலகத்தில் நிறுவப்பட்டது.

anti trump jan 23

ஒபாமா ஆட்சியின்போது ‘ஒபாமா கேர்’ மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட் டது. அந்த திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை புதிய அதிபர் ட்ரம்ப் தொடங்கி யுள்ளார். முதல்கட்டமாக ஒபாமா கேர் திட்டத்தின் சிரமங்களை குறைப்பது தொடர்பான ஆவணத்தில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார். ஒபாமா கேர் மருத்துவக் காப்பீடு திட்டம் விரைவில் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக அனைவருக்கான மருத் துவக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதை கண்டித்து தலைநகர் வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் வாகனங்கள் எரிக்கப்பட்டன, கடைகள் சேதப்படுத்தப்பட்டன. 2 போலீஸார் படுகாயம் அடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். அமெரிக்கா மட்டு மன்றி ஐரோப்பிய நாடுகள், தென்அமெரிக்க நாடுகள், மற்றும் ஆஸ்திரேலியாவில் ட்ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, அவர் பதவி ஏற்ற பின்னரும் அவருக்கு எதிராக பல தரப்பினரும் கிளர்ந்தெழுந்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவருக்கு எதிராக அமெரிக்கா மட்டுமல்லாது 60 உலக நாடுகளில் பேரணிகள் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாஷிங்டன் நகரில் பென்சில்வேனியா அவினியூ, போராட்டக்காரர்களால் குலுங்கியது. அங்கு நடந்த மகளிர் பேரணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் உள்பட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற பிரபலங்களான ஹாலிவுட் பட இயக்குனர் மிக்கேல் மூரே, பெண் உரிமை ஆர்வலர் குளோரியா ஸ்டீனம், இசை கலைஞர் அலிசியா கீஸ் மற்றும் பலர் ட்ரம்புக்கு எதிராக ஆவேசமாக பேசினர். பாப் பாடகி மடோனா, வாஷிங்டன் நே‌ஷனல் மால் அருகே போராட்ட மேடையில் தோன்றினார். ட்ரம்பின் சொந்த ஊரான நியூயார்க் நகரிலும் அவருக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடந்தது. அங்கு போராட்டக்காரர்கள் டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் டவர் நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விட்டனர். இந்த போராட்டத்தில் நடிகைகள் ஹெலன் மிர்ரன், சிந்தியா நிக்சன், ஊப்பி கோல்டு பெர்க் ஆகியோரும் கலந்து கொண்டனர். சிகாகோ நகரில் நடந்த போராட்டத்தில் 1½ லட்சம்பேர் பங்கேற்றனர். பாஸ்டன் நகரில் நடந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த பேரணியில் 7½ லட்சம் பேர் பங்கேற்று, ட்ரம்புக்கு எதிராக முழங்கினர். அங்கு 1½ லட்சம்பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7½ லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவில் நடந்த டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளில் பங்கேற்றவர்களுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் நன்றி தெரிவித்துக்கொண்டார். தனது பிரசார வாசகங்களான ‘‘அனைவரும் ஒன்றிணைந்து வலிமை சேர்ப்போம்’’ என்பதை அவர் புதுப்பித்துக்கொண்டார்.லண்டன், பாரீஸ், பெர்லின், ரோம் மற்றும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நகரங்களிலும், தென் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் நடந்த போராட்டங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.உலகமெங்கும் மொத்தம் 60 நாடுகளில் 600–க்கும் மேற்பட்ட இடங்களில் ட்ரம்ப் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.