வங்கிகளில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக இருக்கும் 4336 காலியிடங்கள்!

இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில் ஏற்படும் காலியிடங்களை ஐ.பி.பி.எஸ்., எனப்படும் இந்தியன் பேங்கிங் பெர்சனல் செலக்சன் எனப்படும் அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் மூலமாக நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக வங்கிகளில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக இருக்கும் 4336 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: அலகாபாத் வங்கியில் 500, பாங்க் ஆப் இந்தியாவில் 899, பாங்க் ஆப் மகா ராஷ்டிராவில் 350, கனரா வங்கியில் 500, கார்ப்பரேஷன் வங்கியில் 150, இந்தியன் வங்கியில் 493, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சில் 300, யூகோ வங்கியில் 500, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 644ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: 1.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.8.1989க்கு பின்னரும், 1.8.1999க்கு முன்னரும் பிறந்திருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் .

தேர்ச்சி முறை
: பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வு என்ற இரண்டு கட்ட நிலைகளில் ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வுகள் இருக்கும். பிரிலிமினரி தேர்வில் இங்கிலீஷ் லாங்குவேஜ், குவாண்டிடேட்டிவ் ஆப்டியூட், ரீசனிங் எபிலிடி ஆகிய பிரிவுகள் இருக்கும். மெயின் தேர்வில் ரீசனிங், ஜெனரல்/பேங்கிங்/எகனாமி, இங்கிலீஷ் லாங்குவேஜ், டேட்டா அனாலிசிஸ், இங்கிலீஷ் லாங்குவேஜ் ஆகிய பிரிவுகள் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க:
 ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 28.8.2019

விபரங்களுக்கு   ; ஆந்தை வேலைவாய்ப்பு