Exclusive

தீபாவளி ரேஸில் இப்போதே முன்னிலையில் இருக்கும் சர்தார்!

மிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.

கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை… என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்.. தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ்.

கார்த்தியின் டபுள் ஆக்சன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்புல் காம்போ, இருக்கையில் அமர்ந்ததுமே ரசிகர்களை கதையோட்டத்திற்குள் இழுத்து செல்லும். ஜி.வி பிரகாஷின் இசை என ரசிகர்களின் முழு திருப்திக்கு நான் கியாரண்டி என்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.

அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே சர்தார் படத்திற்கான எதிர்பார்ப்பு லெவல் எகிறியதால் இந்தப் படத்தின் வியாபாரத்திலும் அது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது.. குறிப்பாக அதிக அளவிலான திரையரங்குகள் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தீபாவளி ரேஸில் சர்தார் முன்னிலையில் இருக்கிறது. அழகான தரமான எண்டெர்டெய்ன்மெண்ட் படங்களைத் தொடர்ச்சியாக மக்களின் பார்வைக்கு தந்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ், அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து இன்னும் பிரமிப்பூட்டும் படைப்புகளைத் தர இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.

aanthai

Recent Posts

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தடை இல்லை : ஐகோர்ட் தீர்ப்பு!

அதிமுக பொது செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை…

7 hours ago

இந்தியாவில் 27.73 கோடி ஊழியர்களின் பி. எப் சேமிப்பு பணத்துக்கு ஆபத்து?

இந்தியாவில் உள்ள ஊழியர்களின் பி.எப் பணத்தின் மதிப்பும் அதானியால் குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்…

1 day ago

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர சம்பளப் புதுப் பட்டியல்!

இந்திய கிரிக்கெட் அணியின் 2022-2023 ம் ஆண்டிற்கான புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தமானது,…

1 day ago

யார்., யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை?- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த…

1 day ago

இஸ்ரோவின் எல்.வி.எம்., 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் ஏவி வருகிறது. இதன்படி…

1 day ago

கருத்துரிமையில் அவதூறு செய்யும் உரிமையும் அடங்கும்!

கடந்த மூன்று நாட்களாக ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. அவர் செய்தது தவறு என்று பாஜக அபிமானிகள்…

2 days ago

This website uses cookies.