இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று (ஏப்.,9) அவர் காலமானார். அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் அமைதியாக பிரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி கிரேட் பிரிட்டன் எனப்படும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் அந்நாட்டின் மன்னருமான பிலிப்(99) கடந்த 2017ம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். வயது முதிர்வின் காரணமாக அவருக்கு உடல்நலம் குன்றியது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மன்னர் பிலிப், விண்ட்சர் கோட்டையில் ஓய்வெடுத்துக் வந்தார்.
இந்த நிலையில், இன்று மன்னர் பிலிப் வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ராணியின் பிரியமான கணவர் தி பிரின்ஸ் பிலிப் உயிரிழந்ததை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1947 ஆண்டு மன்னர் பிலிப்புக்கும் ராணி எலிசபெத்துக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 4 குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள் இளவரசராக இருந்தவர் மன்னர் பிலிப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிந்தார்.
ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப்…
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் 'விடுதலை பார்ட் 1…
தமிழ்நாடு முதலமைச்சர்,மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (29.1.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள்…
சந்தேகங்கள், யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்கி இருக்கிறது ஹின்டன்பர்க்…
”சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்” 69 வயதில் ஒரு மனிதன் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும்…
This website uses cookies.