February 8, 2023

ம்மில் பெரும்பாலானோருக்கு நகைச்சுவை படங்களே மிகவும் அதிகம் பிடிக்கும். இரண்டரை மணி நேரம் ஒரு படத்தை பார்த்தோமா, வயிறு குலுங்க சிரிக்கலாம் என்றே எல்லோரும் ஆசைக் கொள்வோம். அதனாலேயே அப்போதைய படங்களில் படத்தை ஒட்டிய நகைச்சுவை காட்சிகள் வரும். பின்னாளில் பல படங்களில், நகைச்சுவை காட்சிகள் என்பது தனியாக வரும். அப்படியான காட்சிகள் எப்படி வந்தாலும், நாம் முழுமையாக அந்த நகைச்சுவைகளை ரசிப்போம். அதை கவனத்தில் எடுத்துக்  கொண்டு சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட பாணியில், முழுநீள நகைச்சுவை படத்தை எந்தவித சென்டிமென்ட் அல்லது அதிரடி  ஆக்க்ஷன்களையும் திணிக்காமல் என்டர்டெய்ன்மென்ட் ஒன்லி அவர் டார்கெட் என்கிற ஒரே மைண்ட் செட்டில் பிரின்ஸை கொடுத்துள்ளனர்.

கதை என்னவென்றால் மனித நேயமே முக்கியம் என்று முணுமுணுத்தப்படி தெரியாத விஷயங்களையும் தெரிந்தது போல காட்டிக் கொண்டு ஊரில் கெத்தான மனுஷனாய் வாழ்ந்து வருகிறார் உலகநாதன் (சத்யராஜ்). இவருடைய மகனான அன்பு (சிவகார்த்திகேயன்) புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சோசியல் டீச்சராக இருக்கிறார். கூடவே அந்த ஸ்கூலுக்கு- ஆசிரியராக வரும் பிரிட்டன் கேர்ள் ஜெசிகாவை (மரியா) லவ் செய்கிறார். முதலில் மறுக்கும் ஜெசிகா, பிறகு அன்புவின் காதலை ஏற்கிறார். ஆனால், உலகநாதனாகிய சத்யராஜ் தன் தாத்தா, சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்டவர் என்பதால் மகன் ஒரு பிரிட்டன் பெண்ணை காதலிப்பதை ஏற்க மறுக்கிறார். அத்துடன் நாயகி ஜெசிகாவின் தந்தையும் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார் இந்த இரு வீட்டார் எதிர்ப்புகளுடன் ஊரார் ஆதரவுடன் ஜெசிகாவை அன்பு திருமணம் செய்வதெப்படி என்பதே இப்படத்தின் கதை.

ஹீரோ சிவகார்த்திகேயன் கடந்த இரண்டு படங்களில் டார்க் காமெடியையும், காலேஜ் காமெடியையும் வைத்து ஹிட் கொடுத்தவர், இதில் கொஞ்சம் அடிசினலாக கடி ஜோக்ஸ் அல்லது கலக்க போவது யார் டைப் காமெடியை மிக்ஸ் செய்து ஹிட் கொடுக்க முயன்று இருக்கிறார். தன் மீதான அழுத்தத்தை நன்றாக புரிந்து ஒன் மேன் ஆர்மியாக படத்தை தாங்கி நிற்கும் சிவா தன் வழக்கமான டிராக்கில் நகைச்சுவை, காதல், ரொமான்ஸ், டைமிங் என சகல ஜர்னரிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக டான்ஸில் பின்னியிருக்கிறார். அதிலும் அந்த பிம்பிளிக்கி பிளாப்பி பாடலில் வரும் சிங்கிள் ஷாட் டான்ஸ் அடடே சொல்ல வைக்கிறார்.

உலகநாதன் ரோலில் வரும் சத்யராஜ் தன்னுடைய பாணியில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த பிரின்ஸ்படம் மூலம் ரியல் ஃபாரின் கேர்ளான மரியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே கோலிவுட் மற்றும் டோலிவுட் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டாராக்கும் படத்தின் ஏனை நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசை, பாடல்களும்,படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. கேமராமேன் மனோஜ் பரமஹம்சாவின் கைவண்ணத்தில் பிரின்ஸே பளிச் என்றிருக்கிறது. மேலும் நடன இயக்குனருக்கு ஸ்பெஷல் பொக்கே கொடுக்கலாம்.

இப்படி ஒரு எளிமையான கதைக்குள் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் ஒரு போரால் நேரும் வலி போன்றவைகளைப் பற்றி பேசி புரிய வைக்க முயன்றாலும் இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பல இடங்களில் நகைச்சுவைகள் திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. பல இடங்களில் அதெல்லாம் காமெடியா என்று கேட்கவும் வைக்கிறது.

என்றாலும் இந்த தீபாவளி பெஸ்டிவல் மூடில் குடும்பத்தோடு வந்தவர்களை சமாளிக்க வைக்கிறான் இந்த பிரின்ஸ்

மார்க் 3.25/5