June 14, 2021

பெண்கள் கார் ஓட்ட அனுமதிங்கறேன்! – சவுதி இளவரசரின் ட்வீட்

உலகிலேயே பெண்கள் வாகங்களை ஓட்டுவதற்குத் தடை நிலவும் ஒரே நாடு அவுதி அரேபியா. இந்தத் தடையை எதிர்த்து ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னரே 60 க்கும் மேற்பட்ட பெண் வாகன ஓட்டிகள் சமீபத்தில் தொடர்ந்த போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் எதிர்ப்பை சாலைகளில் வண்டியை ஓட்டிச்செல்வதன் மூலம் வெளிப்படுத்தினார்கள். காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி கேள்விகளை எழுப்பினாலும், பிற வாகன ஓட்டிகள் பென் வாகன ஓட்டுனர்களை உற்சாகப்படுத்தியதாகவே அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது யூ டியூபில் வெளியான காரோட்டும் சவுதி அரேபிய பெண்ணின் படத்துக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டும் ஆதரவும் குவிந்தவண்ணம் இருந்தது.

southi woman nov 30

இந்நிலையில் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசரான அல்வலீட் பின் தலால் ட்விட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ‘சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவது என்பது மிக அவசியமான தேவை’ என தலைப்பிட்டு இளவரசர் அக்கடிதத்தை வெளியிட்டுள்ளார்.அதில், ‘பெண்களை வாகனங்கள் ஓட்ட அனுமதி மறுப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு சமமானது.

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது என்பது சமூக அந்தஸ்த்தை உயர்த்திகொள்வதற்காக இல்லாமல் அது ஒரு அவசிய தேவையாக தற்போது மாறியுள்ளது. மேலும், பெண்கள் வாகனங்களை இயக்க அனுமதி அளிப்பதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ எனவும் இளவரசர் அதில் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசக் குடும்பத்தில் இருந்து அரசாங்கத்திற்கு எதிராகவும் பெண்களுக்கு ஆதரவாகவும் இளவரசர் வெளியிட்டுள்ள இக்கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.