பிரதமர் மோடி ஐந்து நாள் பயணத்தை முடித்து கொண்டு இன்று தாயகம் திரும்பினார்!

த்தாலி மற்றும் லண்டனில் நடந்த மாநாடுகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஐந்து நாள் பயணத்தை முடித்து கொண்டு இன்று தாயகம் திரும்பினார்.

இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் துறைமுக நகருமான கிளாஸ்கோவில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்று உரையாற்றினார்.

இந்தநிலையில் மாநாட்டிற்கு பின் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்த அவர், தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு தாயகம் புறப்பட்டார். விமான நிலையத்தில் நடைபெற்ற வழியனுப்பு நிகழ்வில் திரளான இந்தியர்கள் பங்கேற்று மோடியை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்று விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். இத்தாலி மற்றும் இங்கிலாந்து பயணங்களை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், உற்சாக வரவேற்புக்கு பின் நாடு திரும்பினார்.