ராணுவ வீரர்களை கவுரவப்படுத்த வீடுகளில் விளக்கு ஏற்றலாமே!0 பிரதமர் மோடி!

ராணுவ வீரர்களை கவுரவப்படுத்த வீடுகளில் விளக்கு ஏற்றலாமே!0 பிரதமர் மோடி!

தீபாவளி ராணுவ வீரர்களை கவுரவப்படுத்த மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று (நவ., 14) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் சென்று, ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய போது கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், எல்லை பகுதிக்கு சென்று, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார். கடந்த ஆண்டு(2019-ல்) காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலும், 2018-ம் ஆண்டில் உத்தரகண்டிலும், 2017-ல் காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஸ் பகுதியிலும் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 2014-ல் சியாச்சினிலும், 2015-ல் பஞ்சாபிலும், 2016-ல் இமாச்சல பிரதேசத்தில் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார்.

அந்த வகையில், இந்த ஆண்டு பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் உடன் சென்றனர்

இன்று சில வீரர்களுக்கு இனிப்பு வழங்கி விட்டு கூடி இருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், பனிமலையோ, பாலைவனமோ ராணுவத்தினர் எங்கிருக்கிறார்களோ அங்குதான் எனக்கு தீபாவளி. உறையும் பனியிலும் அதிக வெப்பத்திலும், ராணுவ வீரர்கள் நாட்டை காக்கின்றனர். அவர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது. மக்களுடைய அன்பை உங்களுக்காக நான் கொண்டு வந்துள்ளேன். ராணுவத்தினர் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது நான் இருமடங்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் தீபாவளியை கொண்டாடும்போது தான் எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது. பாலைவனமோ, பனிமலையோ ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு தீபாவளி ராணுவ வீரர்களை கவுரவப்படுத்த மக்கள், தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்.

130 கோடி இந்தியர்களும் உங்களுடன் தான் உள்ளனர். உங்களின் தைரியம் மற்றும் பலத்தை கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகின்றனர். நமது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் இருந்து நமது தைரியமிக்க வீரர்களை, உலகின் எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியாது.இந்தியா தனது பாதுகாப்பு திறனை அதிகரிக்கவும், பாதுகாப்பு துறையின் தன்னிறைவு அடையவும் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறது. உள்நாட்டில் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.

நமது தைரியமிக்க வீரர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். நமது மேற்கத்திய எல்லையில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான், தனது பாவத்தை மறைக்க முயற்சி செய்தது. ஆனால், அந்நாட்டிற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. லாங்கிவாலாவில் நடந்த போரை பல தலைமுறையினர் நினைவில் வைத்திருப்பார்கள். நமக்கு தேசநலனே முக்கியம். அதில் சமரசத்திற்கு எந்த இடமும் இல்லை. எல்லையை விரிவாக்க நினைக்கும் நாடு பற்றி உலகம் அறிந்து வைத்துள்ளன. எல்லையை விரிவாக்கும் காலம் 18 ம் நூற்றாண்டை சேர்ந்தது” என்று அவர் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!