இந்தியாவின் முதல் குடிமகனின் ரயில் பயணம்! – வீடியோ!

ந்திய முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த், டெல்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனது பிறப்பிடத்துக்கு இன்று ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி இன்று சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரெயிலில், கான்பூர் புறப்பட்டுச் சென்றனர். ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனது பிறப்பிடமான பரெளன்க் கிராமத்துக்கு செல்கிறார். இதற்காக, தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் ரெயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் பயணிக்கும் ரயில் கான்பூர் தேஹாத்தில் உள்ள ஜின்ஜக் மற்றும் ரூரா இடங்களில் நிற்கும். தனது பள்ளிப் பருவத்திலும், சமூக சேவையில் ஈடுபட்டு வந்த நாள்களிலும் அறிமுகமானவா்களுடன் இவ்விரு இடங்களில் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார்.

இதற்காக பயணிக்கும் அவர்களை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய தலைவர் மற்றும் செயல் தலைவர் சுநீத் ஷர்மா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி ஒருவர் ரயிலில் பயணிப்பது இதுவே முதல்முறை.

இதற்கு முன் கடந்த 2006-ஆம் ஆண்டு ஏபிஜே அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, இந்திய ராணுவ அகாதெமி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு சிறப்பு ரயிலில் பயணித்தார் என்பதும் ஜனாதிபதி ஆன பிறகு ராம்நாத் கோவிந்த் தனது பிறப்பிடத்துக்கு முதல்முறையாக செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.