March 31, 2023

பல்வேறு மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்:: ஜனாதிபதி உத்தரவு!

காராஷ்டிரா மாநில கவர்னர் பகத் சிங்கோஷியாரி, லடாக் கவர்னர் ராதாகிருஷ்ணன் மாத்தூர் ஆகியோர் சமீபத்தில் தங்களது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில் தமிழக பாரதீய ஜனதா தலைவராகப் பணியாற்றிய சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் கவர்னராக செயல்பட்டு வந்த இல.கணேசன் நாகாலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில கவர்னராக செயல்பட்டு வந்த ரமேஷ் பயஸ் மகாரஷ்டிரா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில கவர்னர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநில கவர்னராக ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச கவர்னராக இருந்த ஸ்ரீ பிஸ்வா பூசன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல அருணாச்சலபிரதேச கவர்னராக கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், சிக்கிம் கவர்னராக ஸ்ரீ லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, இமாச்சல பிரதேச கவர்னராக ஸ்ரீ ஷிவ் பிரதாப் சுக்லா,அசாம் கவர்னராக ஸ்ரீ குலாப் சந்த கட்டாரியா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்..

பீகார் கவர்னராக உள்ள ஸ்ரீ பாகு சவுகான் மேகாலயா கவர்னராகவும், இமாச்சல பிரதேச கவர்னராக உள்ள ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத அர்லேகர் பீகார் கவர்னராகவும், அருணாச்சல பிரதேச கவர்னராக இருந்த பிரிக் ஸ்ரீ பி.டி மிஸ்ரா லடாக்கின் லெப்டினட் கவர்னராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.