மோடி தலைமையிலான அரசை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு! – ஜனாதிபதி உரை!

மோடி தலைமையிலான அரசை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு! – ஜனாதிபதி உரை!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி (இன்று) தொடங்கும் என அறிவிக்கப் பட்டது. இதையொட்டி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார். இதே போல் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று காலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்’

பிப்ரவரி 13–ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல், பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், மக்களைக் கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில் கடைசியாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும்.

16 வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்த மசோதா, என்.ஆர்.ஐ.கள் இந்திய தேர்தலில் ஓட்டளிக்க வழிவகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்த மசோதா, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா உள்ளிட்ட பல முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தவிர தனிநபர் மசோதாக் கள் சிலவும் தாக்கல் செய்யப்பட உள்ளன. தனிநபர் மசோதா மீதான விவாதம் பிப்ரவரி 8 அன்று நடைபெற உள்ளது. இருப்பினும் வழக்கம் போல் ரபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி இருஅவைகளிலும் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

முன்னதாக தனது உரையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:-–

இந்த ஆண்டு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. மகாத்மா கொள்கையை நாம் பின்பற்றுவதில் பெருமைப்படுகிறோம். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். மகாத்மா காந்தி, அம்பேத்கர் கொள்கையை பின்பற்ற வேண்டும். ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்க நாம் உறுதி பூண்டுள்ளோம். புதிய பாரதத்தை உருவாக்கும் நோக்கில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. 2014 மக்களவை தேர்தலுக்கு முன்ன, நம் நாடு நிலையற்ற வகையில் இருந்தது. ஆனால், தேர்தலுக்குப் பின், பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிய இந்தியாவை உருவாக்கி தீர்வை கண்டது. இது மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது”

பெண்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். மக்களின் நலனுக்கேற்ப திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளோம். அரசின் நலத்திட்டங்கள் இடையூறின்றி ஏழை, எளிய மக்களை சென்றடைகின்றன. ஏழைகளுக்காக அரசு செயல்படுகிறது. ஊழலுக்கு எதிராக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. இலவச கேஸ் திட்டத்தால், 6 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளனர். விறகு அடுப்பில் சமைத்து வந்த பெண்களுக்கு இலவச காஸ் அளித்துள்ளோம். 13 கோடி குடும்பங்களுக்கு மானிய விலை காஸ் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சுகாதார துறைக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மருத்துவ செலவு தான் மக்களின் பெரும் கவலையாக உள்ளது. மக்களின் நலன் தான் அரசின் முன்னுரிமை. மருத்துவ காப்பபீடு திட்டத்தால், லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை, எளிய மக்களின் துயரங்களை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு அமல் படுத்தப்பட்டு உள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 4 மாதங்களில் 10 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். 50 கோடி பேர் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. பிரதமரின் பல்வேறு காப்பீடு திட்டங்களால் 21 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழகத்தின் மதுரை, காஷ்மீரின் குல்காம் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9 கோடி கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து கிராமங்க ளுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டு உள்ளது. கட்டுமான துறையில் வாய்ப்பு அதிகரித்து உள்ளதால், வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. ஒரு குடும்பம் கூட மின்சாரம் இன்றி, இருளில் வாடக் கூடாது என்பதே அரசின் கொள்கை. அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி விரைவில் சாத்தியமாகும்.

விலைவாசி உயர்வை வெற்றிகரமாக அரசு கட்டுக்குள் வைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகும் புதிய இந்தியாவை உருவாக்கும் அரசின் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும். மாற்று திறனாளி களின் நலனுக்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. வாஜ்பாய் அறிமுகப்படுத்திய சாலைகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து செல்கிறது.

இளைஞர்களை மேம்படுத்த ஸ்டார்ட் அப், ஸ்டான்ட் அப் திட்டங்கள் தொழில்துறையில் அமல் படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உயர் கல்வி நிலையங்கள் திறப்பதில், மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. 7 ஐ.ஐ.டி.க்கள், 7 ஐ.ஐ.எம்.கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கம் வெல்ல தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்ததன் மூலம் நமது வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். சட்ட ரீதியாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

முத்ரா கடன் திட்டம் மூலமாக நாடு முழுவதும் பெண்கள் தொழில் துவங்குவது எளிதாகி உள்ளது. அரசு துறையில், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்கு சேவை விரைவாக கிடைக்கிறன. 103 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. அனைத்து துறைகளிலும் பாலின சமத்துவம் பேண வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு

நாட்டிற்கே உழைக்கும் விவசாயிகளுக்கு தலை வணங்குகிறேன். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு இரவு பகலாக உழைத்து வருகிறது. அரசின் கொள்கைகள் விவசாயிகளை அதிகாரம் பெற செய்துள்ளது. விவசாயிகள் பலன்பெற, குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தை ஒப்பிடுகையில் விவசாயிகளின் வருமானம் 1.5 மடங்கு அதிகரித்து உள்ளது.

2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசுக்கு முழு அளவிலான பெரும்பான்மையை மக்கள் அளித்து, கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராக ஸ்திரமான நடவடிக்கையை எடுக்கத் தீர்ப்பளித்தனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஊழலுக்கு எதிராக இந்த அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இ-கவர்னன்ஸ் திட்டம் இந்தியாவின் தொலை தூர கிராமங்களை சென்றடைந்துள்ளது. கிராமங்களை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக இணைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. டிஜிட்டல் இந்தியா திட்டம் கிராமங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. 34 கோடி புதிய வங்கி கணக்குகள் துவக்கப் பட்டுள்ளன. நிதித்துறையில் அரசு புரட்சி கொண்டு வந்துள்ளது. அரசின் மானியம் மக்களுக்கு நேரடியாக சென்றடைகின்றன.

அரசு எடுத்த பெரிய திட்டம் ரூபாய் நோட்டு வாபஸ். இதன் மூலம் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. கறுப்பு பணத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும். தொழில் செய்வோருக்கு ஜிஎஸ்டி பெரிய பலன் அளித்துள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் பேறு கால விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை அரசு அதிகரித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ரயில் இணைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. உலக நாடுகள் இந்தியாவை மரியாதையுடன் நடத்துகின்றன. உலகளவில் பெரிய சக்தியாக இந்தியா மாறி வருகிறது. ஏழைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் நலத் திட்டங் கள் இடையூறு இன்றி மக்களை சென்றடைகின்றன. ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம்

error: Content is protected !!