December 4, 2021

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞா் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீதித்துறையை விமா்சித்து பிரசாந்த் பூஷண் வெளியிட்ட 2 சுட்டுரை பதிவுகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அதுதொடா்பாக சுப்ரீம்கோர்ட் தாமாக முன்வந்து விசாரித்தது.இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று கடந்த 20-ஆம் தேதி தீா்ப்பளித்த நிலையில், பிரசாந்த் பூஷண் தனது கருத்துகளை திரும்பப் பெற்று, மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி கடந்த 24-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது.

எனினும், பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கோர மறுத்ததையடுத்து அந்த விவகாரம் தொடா்பான விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது பிரசாந்த் பூஷண் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்காக நீதிமன்ற அமா்வு அவருக்கு 30 நிமிடங்கள் அவகாசம் அளித்தது. இருந்தபோதும் பிரசாந்த் பூஷண் தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.இதையடுத்து, ‘ஒரு நபா் தான் செய்தது தவறு என்பதை உணர வேண்டும்’ என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, அடுத்த விசாரணையின் போது பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு வேளை அபராதத்தை செலுத்தத் தவறினால் மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றவும், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவேன் என்று பிரசாந்த் பூஷண் தெரிவித்து உள்ளார். ஆனாலும் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் நான் சுட்டுரையில் கருததுகளை பதிவிடவில்லை என்றும் பூஷண் விளக்கம் அளித்துள்ளார்.

நம் நாட்டைப் பொறுத்தவரை இந்த ஒரு ரூபாய் நோட்டுதான் நமது அடிப்படையான ரூபாய் நோட்டு. இதை மட்டுமே ஒன்றிய அரசு நேரடியாக வெளியிடுகிறது. அதில் அரசின் செயலாளர்தான் கையெழுத்து இடுகிறார். மற்ற அனைத்து ரூபாய் நோட்டுகளையும் (5, 10, 20, 50, 100, 200, 500) ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. சட்டப்படி அவை பிராமிஸரி நோட்டுகள்தான்!

உங்கள் பாக்கெட்டில் உள்ள ஒரு ரூபாய் அல்லாத வேறொரு மதிப்புள்ள ரூபாய் நோட்டை எடுத்துப் பாருங்கள்.
I promise to pay the bearer the sum of XXX rupees என்று அச்சிடப்பட்டிருக்கும். அதாவது அதில் குறிப்பிட்டுள்ள மதிப்பிற்கு நிகரான பணத்தை வழங்குவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் உத்தரவாதம் வழங்குகிறார்.

அப்படி என்றால் எது ஒரிஜினல் பணம்?

ஒரு ரூபாய் நோட்டு மட்டுமே ஒரிஜினல் பணம்!