Exclusive

நுரையீரலைப் பலப்படுத்த உதவும் ப்ராணாயாமம்!- வீடியோ!

இந்த கொரோனா காலத்தில் மூச்சுப் பயிற்சி மிக அவசியம்…. நுரையீரல் நல்லபடியாக இருந்தால் தொற்று பற்றுவது குறைவாக இருக்கும்….! இந்த மூச்சுப் பயிற்சியின் பெயர் ப்ராணாயாமம்! இதைச் செய்வது மிகச் சுலபம்…. எப்படி? ஒரு விரலால் மூக்கை ஒரு பக்கம் மூடிக்கொண்டு, இஞ்ச் இஞ்ச்சாக மூச்சை இழுத்து நுரையீரலை பலூன் போல நிரப்பவும்!….நிரம்பிய உணர்வு வந்ததும் இரண்டு நாசிகளையும் மூடிக் கொள்ளுங்கள். மனதிற்குள் கடிகார வினாடியில் பத்து (ஆரம்ப காலங்களில்) வரை எண்ணுங்கள். எண்ணிக்கை முடிந்ததும் முன்பு காற்றை உள்வாங்கிய நாசித் துளையை விரலால் மூடி, மற்ற துளை வழியாக, இஞ்ச் இஞ்ச்சாக ஃபோர்சாக வெளியேற்றுங்கள்.

இப்போது நுரையீரல் காலியாக இருக்கும்…. இரு நாசித் துவாரங்களையும் மூடி, ஐந்து வரை எண்ணுங்கள்…. எண்ணிக்கை முடிந்ததும், மறுபடி ஒற்றை நாசி வழியே காற்றை இஞ்ச் இஞ்ச்சாக உள்ளே இழுத்து மறுபடி 10 வரை எண்ணி வெளியேற்றுங்கள்….

ஒரு வாரம் 10 வரை பயிற்சி செய்த பின்னர் 15 வரை போகலாம்… முதலிலேயே 15 எண்ணிக்கை வேண்டாம்… உடல் பருமனாக உள்ளவர்கள் 6 முதல் 9 வரை எண்ணிக்கையைத் தொடங்கலாம்…. இந்தக் காற்றை இழுத்து வெளியேற்றும் சைக்கிளை 10 முதல் 20 வரை செய்யலாம். அல்லது 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரைச் செய்தால் பெரும் பயன் கிடைக்கும்.

சரி… உங்கள் நுரையீரல் பவர் எப்படி உள்ளது என அளக்கலாமா?

அதன் வீடியோ இதோ:

மூச்சுப் பயிற்சியை ஆரம்பிக்கும் முன் உங்களது எண்ணிக்கை என்ன என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்… ஒரு வாரம் கழித்து எத்தனை எண்ணிக்கை என்று விடியோ பயிற்சியில் தெரிந்து கொண்டால் வியப்படைவீர்கள்…

காற்றை ஒரே சீராக உள்ளே இழுக்க வேண்டாம். காற்றை இஞ்ச் இஞ்ச்சாக உள்ளே இழுப்பதால் காற்று கம்ப்ரெசர் மூலம் அழுத்தம் பெற்றது போல ஆக்சிஜன் நுரையீரல் மொட்டுகளில் அழுத்தமாக உட்சென்று, மிக வேகமாக இரத்தத்தில் கலக்கும். உங்களிடம் SPO2 கருவி இருந்தால் இதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்…

எனது சகோதரரின் அளவு 89% லிருந்து இந்தப் பயிற்சியின் மூலம் 99% வரை ஆக்சிஜன் இரத்தத்தில் கலந்ததை நானே பார்த்திருக்கிறேன்…. கொரோனா காலத்தில் நுரையீரல் பயிற்சி மிக முக்கியமானது. ஆஸ்துமா உள்ளவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.

நுரையீரல் பலமாக இருந்தால் வேக்சின் நன்றாக வேலை செய்யும்….உங்களால் முடிந்தவரை இந்தப் பதிவைப் பகிருங்கள்…நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்கட்டும்!.

aanthai

Recent Posts

டிஎன்பிஎஸ்சி : குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகிடுச்சு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த…

4 hours ago

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் ‘தீராக் காதல்’!

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு,…

7 hours ago

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை பட இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை. இந்த படத்தில்…

7 hours ago

ராகுல் காந்தியின் எம்.பி. பொறுப்பு பறிப்பு!- மோடி அரசு அதிரடி!

பிரதமர் 'மோடி பெயர்' குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் எம்.பி பதவி…

7 hours ago

மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துகிறது – 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் தாக்கல்…

8 hours ago

லாபத்துடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை!

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது.…

2 days ago

This website uses cookies.