33 % மாணவர்களும், 24 % மாணவிகளும் ஆபாச பட மோகத்திற்கு அடிமை – சர்வே ரிசல்ட்!
தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சத்துக்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் செல்போன் மூலம் ஆபாச படக்காட்சிகளை விரும்பி பார்க்கிறார்கள் என்றும், இதில் 5 லட்சம் சிறார்கள் தகாத உறவில் ஈடுபடுகின்றனர் என்றும் முன்னரே ஆய்வுத் தகவல் வெளியான நிலையில் தற்போது 16 முதல் 22 வயதுடைய மாணவ, மாணவிகள் குழந்தைகள் குறித்த ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் வரை கூட புளூ பிலிம்கள் எனப்படும் ஆபாச சினிமாக்களைப் பார்ப்பது, அந்த படங்களை, ‘வீடியோ’ கேசட், புத்தகங்களாக வைத்திருப்பது அநாகரிகம், அசிங்கம், ஆபத்தானது என்ற எண்ணம் வலுவாக இருந்தது. எனினும், ஒரு சிலர், அவ்வப்போது மறைவாக அந்த படங்களை பார்த்து வந்தனர். அந்த அளவுக்குத் தான் அப்போது, வசதி, வாய்ப்பு இருந்தது.
ஆனால், இப்போது, எல்லாமே தலை கீழ், ‘சுனாமி’ வந்து புரட்டி போட்டது போல ஆகி விட்டது. புளூ பிலிம் ஆபாச வீடியோ படங்கள் இணையத்தில் லட்சக்கணக்கில் உள்ளன. இன்டர்நெட் இணைப்பு 24 மணி நேரமும் உள்ள ‘ஸ்மார்ட்’ போன்கள், பிளஸ் 1 படிக்கும் பையன், பெண்ணின் கைகளில் கூட தாராளமாக புழங்குகின்றன. சரியான கண்காணிப்பு இல்லாத, பெற்றோரால் அதிக சுதந்திரம் அளிக்கப்படும் பிள்ளைகளின் ஸ்மார்ட் போனில் புளூ பிலிம் வீடியோ கலெக் ஷன்ஸ் உள்ளது. அவர்களின், கம்ப்யூட்டர், பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவற்றில் கூட ‘அந்த’ சமாச்சார படங்கள், பதிவிறக்கம் செய்யப்படுகின்றன
இந்நிலையில் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மாணவ மாணவயரிடையே பாலியல் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. இதில் 30 ஆங்கில பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இதன் படி குறைந்தது 33சதவீத மாணவர்களும், 24 சதவீத மாணவிகளும் ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகி உள்ளனர். மேலும் தங்களின் நிர்வாண படங்களை செல்போனில் பகிர்ந்துள்ளனர். 40 சதவீத கல்லூரி மாணவர்கள் தங்களின் லேப்டாப் கம்பயூட்டர் மூலம் வன்முறை மற்றும் ஆபாச வீடியோக் களை பார்ப்பதாகவும், ஒரு மாணவ, மாணவியர் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 40 ஆபாச வீடியோக்களை பார்பதாகவும், நாள் ஒன்றுக்கு மும்பையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆபாச வீடியோக்கள் பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 25 சதவீத மாணவர்கள் ஆபாச வீடியோக்களை பார்த்து அது போன்ற செயலை செய்ய தங்களை தூண்டுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 46 சதவீதத்தினர் ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து நடத்திய ஆய்வில் கல்லூரி மாணவியர் களில் 10 சதவீதம் பேர் ஆபாச படம் பார்த்து தவறான உறவால் கருக்கலைப்பு வரை செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், மும்பையில் மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 4 ஆயிரம் கல்லூரி மாணவிகள் கருக்கலைப்பு செய்வதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து உளவியலாளர்கள் கூறுகையில் இது போன்ற சம்பவங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பெரியவர்கள் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இது போதை பொருளை போன்றது. இது பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் சம்பவங்களுக்கு வழி வகுக்கும் .இவ்வாறு அவர் கூறி உள்ளனர்.