வீட்டு வசதி வாரிய தலைவரானார் பூச்சி முருகன் – அவர் குறித்து சில குறிப்புகள்!

வீட்டு வசதி வாரிய தலைவரானார் பூச்சி முருகன் – அவர் குறித்து சில குறிப்புகள்!

மிழக வீட்டு வசதி வாரியத்தின் தலைவாக பூச்சி எஸ்.முருகன் நியமனம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “அனைவருக்கும் வீட்டு வசதி என்ற குறிக்கோளை எய்தும் வகையில், உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும், வாங்கத்தக்க விலையில் வீடுகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வீடுகள், சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்காக பல்வேறு திட்டங்கள் வாயிலாக லட்சக்கணக்காக மக்கள் வீட்டு உரிமையாளர்களாக வேண்டும் என்ற அவர்களுடைய கனவை நனவாக்கிய பெருமைக்குரியது. அத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக திரு.பூச்சி.எஸ்.முருகன் அவர்களை நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திரு பூச்சி எஸ்.முருகன் அவர்கள் ஏற்கனவே திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர்கள் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.

அது சரி பூச்சி முருகன் குறித்து மேலும் அறிய விருப்பமா? இதோ-

ஒரு பிரச்னை அல்லது தப்பு நடந்த இடத்தில் இந்த கொரொனா வைரஸ் மாதிரி கண்ணுக்குத் தெரியாத பூச்சி மாதிரி நுழைந்து நியாயத்தை கண்டு பிடித்து விடுவதால் பூச்சி முருகன் என்றானார். இவர் மனைவி வழக்கறிஞர் என்பதால் ஆலோசித்து சரியான/ சட்டபடியான பாதையிலேயே பயணிப்பதால் இவருக்கு எல்லா தரப்பிலும் நெருங்கிய தொடர்புண்டு.

தி.மு.க-வில் வீட்டுவசதி வாரிய தொழிற்சங்கத்தில் இருந்தார் / இருக்கிறார்,

திமுக இலக்கிய அணியிலும் முக்கியப் பொறுப்புகளில் இருந்த அவர், இப்போது தலைமைக் கழகச் செயலாளராக இருக்கிறார். ஆரம்பத்தில் ஆள் பார்க்க குள்ளமாக இருப்பதை வைத்து, ‘பூச்சி’ என்றார்களாம் சிலர். பின்னர் இவர் சகல கட்சிகளிலும் ஊடுருவி பலரின் போக்குகளை கண்டறிந்து கலைஞருக்கு விளக்கியதால் கலைஞர் வாயால் சொன்னதாலும் அவர் பேராக பூச்சி முருகன் ஆகிவிட்டது.

தி.மு.க.வு-க்கான பிரசார நாடகங்களில் நடிப்பதும் அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டுவதுமாக இருக்கும் இவர், வடிவேலுவின் நெருங்கிய சகா.ஆகவே வடிவேலு படங்களில் பெரும்பாலும் இவர் இருப்பார் . வடிவேலு ஹீரோவாக நடித்த “தெனாலிராமன்” படத்தில் பார்வை இழந்த பிச்சைக்காரராகவும், “எலி” படத்தில் காவல்துறை அமைச்சராகவும் நடித்திருந்தார். இவரது அப்பா சிவசூரியன் முன்னாளில் பிசியான நடிகர். “மந்திரிகுமாரி” படத்தில் இவர் பேசிய “பீம்சிங்.. இதென்ன புதுக்குழப்பம்?” என்கிற டயலாக் அந்தக்காலத்திலேயே ரொம்ப பிரபலம். சர்வாதிகாரி, தூக்குதூக்கி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிவசூரியன். தந்தையை பார்த்து முருகனுக்கும் நடிப்பில் ஆசை வந்தது.

ஆனால் அறிவாலயத்தில் இவர் பணி முக்கியமாகிப் போனதால் கலைச் சேவைக்கு வாய்ப்பு குறைந்து போனது. ஆனாலும் இவர் கைக் காட்டினால் கோடி கணக்கில் ஃபைனான்ஸ் செய்ய பலர் தயாராக இருப்பதால் கோலிவுட்டில் இவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.

பெரிய அளவில் ஆக்ட் & கோலிவுட்டில் ஆர்வம் காட்டாமல் இருந்தவர் தற்செயலாக தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தையும், அதன் அறங்காவலர் குழுவையும் ராதாரவியும், சரத்குமாரும் கபளிகரம் பண்ண திட்டமிடுவதைக் கண்டுணர்ந்து இவர் உருவாக்கிய புது அணிதான் நாசர் & விஷால் தலைமையிலான டீம்.

பூச்சியாருக்கு போன் போட்டால், “எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்.. வாழ்வு வந்தால் அனைவரயும் வாழ வைப்போமே…” என்ற பாடல் ஒலிக்கும்..1

ஆம்.. எந்த ஒரு பதவி & அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கஷ்டமென்றால் நேரில் வந்து உதவிடும் மனசுக் கொண்ட பூச்சியாருக்கு விரைவில் அமைச்சர் பதவி கிடைக்க இன்னொரு திறவுகோல் கிடைத்துள்ளது.. அதற்கு(ம்) வாழ்த்துகள்!💐

ரெங்கராஜன்

error: Content is protected !!