February 6, 2023

பொய்க்கால் குதிரை – விமர்சனம்!

டான்ஸ் மாஸ்டர், டைரக்டர்,ஆக்டர் என ஏகப்பட்ட திறமைகளை தனக்குள் வைத்துள்ள பிரபு தேவா சமீபகாலமாகவே நடிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். அதே சமயம் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனக் கொண்டாடப்படும் பிரபுதேவா தான் படத்தில் 4 அல்லது 5 பாடல்களை வைத்து தாறுமாறான ஸ்டெப்ஸை போட்டு ஓட்டி விடும் சூழலில் அடலஸ் ஒன்லி பேமஸ் டைரக்டர் சந்தோஷ் பிரபுதேவாவுக்கு ஒரு காலே இல்லை என ஸ்க்ரிப்ட் எழுதி அதையும் பிரபுதேவாவிடம் சொல்லி ஓகே வாங்கி அவரை நடிக்க வைத்ததற்கும் நிஜமாகவேஒரு பாராட்டு விழா நடத்தலாம் தான்.

கதை என்னவென்றால் ஒரு விபத்தில் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார் கதிரவன் (பிரபுதேவா). ஒரு கால் இழந்தாலும் தனது அன்பு மகளை காப்பாற்ற வேண்டும் என வாழ்ந்து வரும் அவருக்கு, ஒரு நாள் திடீரென மகளுக்கு இதயத்தில் பிரச்சனை வந்து பல லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற சூழல் ஏற்படுகிறது. அதற்கு உதவ யாரும் முன்வராத சூழ்லில் பணக்கரியான ருத்ராவின் (வரலஷ்மி சரத்குமார்) மகளை கடத்தி பண்ம் கேட்கலாம் என்கிற பிளான் போட்டு இறங்கியவர், வரலக்‌ஷ்மியிடம் சிக்கிக் கொள்கிறார். அதே சமயம் வரலக்‌ஷ்மி குழந்தையை வேறு ஒரு பார்ட்டி கடத்த அந்த குழந்தையை பிரபுதேவா காப்பாற்றுவது தான் பொய் கால் குதிரை!

பிரபுதேவா தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். துவக்கத்தில் அட்டகாசமான ஒற்றைக்கால் நடனப் பாட்டில் முத்திரை பதிக்கிறார் பிரபுதேவா . அதிலும் இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்களை விட இந்தப் படம் ஓகே ரகம் என்றே சொல்லலாம். பிரபு தேவாவின் மகள் மகிழாக ஆழியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, மை டியர் பூதம் படத்தில், அஷ்வந்தின் தோழியாகத் துறுதுறுவென நடித்திருப்பார். இப்படத்திலும், அதே துறுதுறுப்புடனும், கூடுதல் துள்ளலுடன் நடித்துள்ளார்.. ஒரு பெரும் நிறுவனத்தைக் கட்டியாளும் கோடீஸ்வரி ருத்ராவாக வரலட்சுமி சரத்குமார்க்கு மிடுக்கான கதாபாத்திரம். கதையோடு பொருந்தி வரும் பாத்திரம். அவர் சமயத்துக்குத் தக்கவாறு எடுக்கும் முடிவுகள் ரசிக்க வைக்கின்றன. படத்தில் ரெய்ஸா வில்சன் இருப்பினும், வரலட்சுமியையே நாயகியெனக் கூற இயலும்.

பின்னணி இசை பக்க பலமாக இருந்திருக்கிறது .ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் கைகோர்த்து படத்தை தொய்வில்லாமல் நகர்த்த உதவுகிறார்கள்.

ஆபத்தான சமயத்தில் சில மருத்துவமனைகள் எப்படி நடந்துகொள்கின்றன, சிகிச்சையில் இருப்பவர்களுக்காக சில என்.ஜி.ஓக்கள் பணத்தை வசூலித்து எப்படி ஏமாற்றுகிறார்கள், உடல் உறுப்புகளுக்காக குழந்தைகள் கடத்தல் நடக்கிறது என்பதை எல்லாம் எக்ஸ்போஸ் செய்ய முயன்று இருக்கிறார்கள்..

மொத்தத்தில் இந்த பொய்கால் குதிரை – தியேட்டருக்கு போய் பார்க்க தகுந்த படம்தான்

மார்க் 3/5