ஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு!

ஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு!

வரும் 28-ம் தேதி முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது. இதனை அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கனவே சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டது. வேதா நிலையம் அரசுடமையானது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் இல்லத்தில் உள்ள பொருட்களின் விவரங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “வரும் 28-ம் தேதி முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!