பஞ்சாப் நேஷனல் பேங்க்-கில் மோசடி செய்த முகுல் சோக்சி இந்தியக் குடியுரிமையை துறந்தார்!

பஞ்சாப் நேஷனல் பேங்க்-கில் மோசடி செய்த முகுல் சோக்சி இந்தியக் குடியுரிமையை துறந்தார்!

பஞ்சாப் நேஷனல் வங்கியின்  14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, மேற்கிந்தியத் தீவு நாடான ஆன்டிகுவாவின் குடியுரிமை பெற்றுள்ள, பிரபல தொழிலதிபர், முகுல் சோக்சி இந்தியக் குடியுரிமையை துறந்து விட்டார். இதையொட்டி  தன் இந்திய பாஸ்போர்ட்டை அவர் திருப்பி அளித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, பிரபல வைர வியாபாரிகளான, நீரவ் மோடி மற்றும் அவனது உறவினரான, முகுல் சோக்சி, 59, வங்கி மோசடி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலை யில், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். வங்கியில் பொய் ஆவணங்களைக் கொடுத்து, 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, நீரவ் மோடி மற்றும் முகுல் சோக்சி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முகுல் சோக்சிக்கு எதிராக, சர்வதேச போலீஸ் அமைப்பான, ‘இன்டர்போல்’ தேடப்படும் குற்றவாளி என்ற அறிவிப்பையும் கடந்தாண்டு வெளியிட்டது. ஆன்டிகுவா தப்பிச் சென்ற முகுல் சோக்சி, அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தேடப்படும் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம், அந்த நாட்டுடன் செய்யப்படவில்லை.

அதே நேரம் அந்த நாட்டு சட்டத்தின்படி, தேடப்படும் குற்றவாளியை   காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியும். அதன்படி, முகுல் சோக்சியை, நாடு கடத்தி வருவதற் கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இரட்டை குடியுரிமை உள்ளதால், நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளதாக கருதி இந்திய குடியுரிமையை, முகுல் சோக்சி விட்டுக் கொடுத்துள்ளார்.

ஆன்டிகுவாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தன் பாஸ்போர்ட்டை திருப்பி அளித்து, அதற்காக, 12 ஆயிரத்து, 600 ரூபாய் கட்டணத்தையும் செலுத்தி உள்ளார். இதன் மூலம், ஆன்டிகுவாவின் குடியுரிமையை மட்டும் வைத்திருக்க அவர் முடிவெடுத்துள்ளார்.இதை அடுத்து அவரை இந்தியா அழைத்து வர வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிகிறது.

Related Posts

error: Content is protected !!