தீ விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுங்க ; -ரேடியோவில் மோடி பேச்சு!
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையில் அகில இந்திய வானொலி வழியே “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த வகையில் இன்றைய மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசும் போது, முதலில், நவராத்திரி பண்டிகையையொட்டி இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், தங்க ளுடைய படிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், மாணவர்களின் அனுபவங்கள் அடிப்படையில் “எக்ஸாம் வாரியர்ஸ்” புத்தகத்தின் அடுத்த பதிப்பை எழுத முற்படுவேன் என்றும் கூறினார்.மேலும், பெண் குழந்தைகளை கொண்டாட “பாரத் கி லட்சுமி” என்ற புதிய முயற்சியை தொடங்க வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெண்களின் சாதனைகளை #BharatKiLakshmi என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் என்றும், பெண்கள் திறமை, வலிமையை நாரி சக்தி என்ற பெயரில் கொண்டாடுவோம் என்றும் “மான் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று ரேடியோவில் பேசிய அவர் நான் இந்தியா புறப்படுவதற்கு முன், மூத்த சகோதரி லதா மங்கேஷ்கரை போனில் அழைத்து அவரது 90வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் கூறினேன், “தங்களை இந்த நேரத்தில் நான் அழைத்ததற்கு காரணம் தங்கள் பிறந்தநாளில் நான் விமானத்தில் இருப்பேன், எனவே முன்கூட்டியே வாழ்த்த வேண்டுமென்று விரும்பினேன். தங்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கட்டும், தங்கள் ஆசீர்வாதங்கள் எங்கள் மீது இருக்கட்டும். இதைத் தெரி விக்கத்தான் நான் அமெரிக்காவிலிருந்து புறப்படும் முன்பே தங்களை அழைத்தேன்.” என்றேன். போனில் அழைத்ததற்காக மகிழ்ச்சி தெரிவித்த மூத்த சகோதரி, எனது ஆசீர்வாதங் களையும் தான் நாடுவதாகத் தெரிவித்தார். அதற்கு, ”தங்களைப் போன்ற மூத்தவர்கள்தான் எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டேன்.
இதற்கு பதில் மூத்த சகோதரி, “இது எல்லாம் என் பெற்றோரின் ஆசீர்வாதம் மற்றும் ரசிகர்களின் அன்பு காரணமாக ஏற்பட்டதாக நான் நினைக்கிறேன். நான் ஒன்றுமில்லை” என்று பாடகி தெரிவித்த போது, நான் குறுக்கிட்டு “இந்த தன்னடக்கமே எங்களுக்கு ஊக்கமளிக்கிறது, இவ்வளவு சாதித்த போதிலும், தங்கள் தன்னடக்கத்தையும் மதிப்புகளையும் நீங்கள் மறக்கவில்லை” என்றேன்.
“நான் உங்களை பார்க்கும்போதெல்லாம், நீங்கள் எப்போதும் எனக்கு சில குஜராத்தி உணவை வழங்கினீர்கள்… இந்த குடும்பம் போன்ற பாசம் எனக்கு சிறப்பு மகிழ்ச்சியைத் தருகிறது, இந்த முறை நான் மும்பைக்குச் சென்றபோது, உங்களைச் சந்திக்க விரும்பினேன், ஆனால் இறுக்கமான கால அட்டவணை காரணமாக அது சாத்தியமில்லை. நான் மிக விரைவில் வருவேன், உங்களால் தயாரிக்கப்பட்ட சில குஜராத்தி உணவுகள் கிடைக்கும்” என்று நான் உறுதியளித்தேன். அப்போது அவர், “உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது. நீங்கள் இந்திய அரசியலில் வந்ததிலிருந்தே இந்தியாவின் சித்திரம் மாறத் தொடங்கியது என்பது எனக்குத் தெரியும், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார்.
நான் மீண்டும், ”தங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். தீதி நீங்கள் தொடர்ந்து எங்கள் நாட்டு மக்களை ஆசீர்வதிப்பீர்கள், இதனால் எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சில நன்மைகளைச் செய்வார்கள். நீங்கள் எப்போதும் என்னை ஊக்கப் படுத்தியிருக்கிறீர்கள் … என்னைப் பற்றிய உங்கள் அக்கறைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்றேன்” என்று
மோடி லதா மங்கேஷ்கரின் 90வது பிறந்தநாள் வாழ்த்துகுறித்து மன் கி பாத்தில் உரையின்போது தெரிவித்தார்.லதா மங்கேஷ்கரின் தாய் ஷெவந்தி மங்கேஷ்கர் எனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத்தியே லதா மங்கேஷ்கர் உடனான பிரதமரின் நட்பை பிணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மோடி பேசும் போது புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு வழி வகுக்கும், இ சிகரெட் மற்றும் புகையிலை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இ சிகரெட்டுகள் உயிருக்கு கேடு விளைவிப்பவை என்று தெரிவித்த மோடி, அவை தொடர்பாக இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்று குறிப்பிட்டார். புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து விடுபடுவது கடினம் என்று கூறிய அவர், நிக்கோட்டினால் மன வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.
எனவே இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்தில் இருந்து இ சிகரெட்டுகள் பயன்பாட்டில் இருந்தும் விடுபட வேண்டும் என்றும் ஆரோக்கியான இந்தியாவைப் படைக்க வருமாறும் வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவை உலக நாடுகள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டுள் ளதாக பெருமிதம் தெரிவித்தார். அத்துடன் தீ விபத்து ஏற்படாத வகையில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் பிரதமர்.