September 25, 2021

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு -மோடியின் பிஜிலி யோஜனா அறிமுகம்!

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவ்பாக்யா பிஜிலி யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி நேற்று  துவங்கி வைத்தார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கும் சவ்பாக்யா பிஜிலி யோஜனா திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2019 மார்ச் 31ம் தேதிக்குள் அனைவருக்கும் மின்சாரம் என்பதை அந்த மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்பு தொகையை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகளில் செலுத்தலாம். மொத்த செலவீனத்தில் 60 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும் 30 சதவீதம் கடனாகவும் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவ்பாக்யா பிஜிலி யோஜனா  திட்டத்தை தெடாங்கி வைத்த பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் 50 கோடி குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 4 கோடி குடும்பங்களில் மின்சார வசதி இல்லாமல் உள்ளன. அதன்படி நாட்டில் 20 சதவீத குடும்பங்கள் இன்னும் மின்சார வசதி பெறாமல் கஷ்டபடுகின்றனர். மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து பாருங்கள் அப்போது தெரியும் அந்த 20 சதவீத குடும்பங்களின் கஷ்டமும், வேதனையும் என்று வருத்தத்துடன் மோடி தெரிவித்தார்.

ஒரு ரூபாய் செலவு இல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்திற்காக பல ஆயிரம் கோடிகள் செலவாகும், அதை நாங்கள் அவர்களிடமிருந்து வசூலக்கப் போவதில்லை. தீனதயாள் உபதய்யா பிறந்தநாளில் ஏழை மக்களின் இருட்டை விலக்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகாவும் தெரிவித்தார்.