October 6, 2022

இதோ.. பிரதமர் மோடி ஜெர்மனி போய் சேர்ந்தாச்சில்லே!

ரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். வருகிற 4ஆம் தேதி வரை ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பயணத்தின் முதல் கட்டமாக திங்கள்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார். ஜெர்மனியில் உள்ள இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை ஆரவாரத்துடன் மகிழ்ச்சியுடன் அன்பாக வரவேற்றனர். சில குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ஓவியங்களை வழங்கினர், அதில் பிரதமரும் கையெழுத்திட்டுள்ளார்.

ஐரோப்பா பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பா சுற்றுப்பயணம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.அதுவும் இந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். உக்ரைன் மீதான ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். . இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மோடியின் பயணம், பிறகாரணங்களுக்காகவும் இந்தியாவிற்கு சிறப்பு வாய்ந்தது.

இன்று ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்திக்கும் பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடஉள்ளார். மேலும், 6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பாதுகாப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஓலப் ஸ்கால்சுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள உள்ளார்.

ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் அவர் செல்கிறார். மூன்று நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.