August 4, 2021

முதல் நீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியாவின் முதல் நீர் வழி விமான சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் இன்று தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவாடியாவில் உள்ள படேல் ஒற்றுமை சிலை ஆகியவற்றின்  இடையே இன்று முதல் நாள்தோறும் 2 நீர்வழி விமானங்களை இயக்கப்போவதாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது. அதன்படி நாட்டின் முதல் நீர்வழி விமான சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. சபர்மதி ஆற்றில் இருந்து புறப்பட்ட நீர் வழி விமானத்தில் பயணம் செய்து, நீர்வழி விமானச்  சேவையை  தொடங்கிவைத்து இந்த கடல் விமான சேவை  இப் பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

உடான் திட்டத்தின் கீழ் இயங்கும் இந்த நீர்வழி விமானங்களின் பயண நேரம் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் ஆகும். படேல் ஒற்றுமை சிலை, ஆகமதாபாத் இடையே பயண நேரம் 4 மணியில் இருந்து 45 நிமிடங்களாக குறையும். ஒரு நாளைக்கு, இந்த விமானம் 8 முறை இயக்கப்படும்.

நீர்வழி விமானங்களில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம்  1,500 ரூபாய் ஆகும்.

நீர்வழி விமானங்களின் பயணச் சீட்டுகளை இணையதள முகவரியில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நீர்வழி விமானச் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.