October 16, 2021

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை முழு விபரம்!

நாட்டின் 72வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இவ்விழாவில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா, காங்., தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செங்கோட்டையில் நாட்டின் மூவர்ணக் கொடியை பிரதமர் மோடி 5வது முறையாக ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்த உரையில் மத்திய அரசின் திட்டங்கள், சாதனைகள், நாட்டின் வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அப் போது, தமிழகத்தின் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கவிதையை மேற்கோள்காட்டி, தமிழில் கவிதையைக் கூறி பிரதமர் மோடி பேசினார். பாரதியாரின் பாரத சமுதாயம் வாழ்கவே என்ற பாடலில் உள்ள வரிகளைச் சுட்டிக்காட்டி மோடி பேசினார். ”எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்” என்ற வாக்கியத்தைக் கூறி மோடி பேசினார்.

அப்போது மோடி கூறியதாவது:

நாட்டு மக்களுக்கு 72வது சுதந்திர தின வாழ்த்துக்கள். நான் இந்நாட்டு பெண்களை வணங்குகிறேன் நம் மகள்கள் அனைத்து 7 கடல்களையும் கடந்து மூவர்ணக்கொடியினால் உலகையே வண்ண மயமாக்கியுள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பழங்குடியின குழந்தை களை வணங்குகிறேன். இவர்களால் இந்தியா பெருமையடைகிறது.

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சமூகநீதிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிறபிற்படுத்தப்பட்டோருக்கான ஒபிசி கமிஷனுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை இந்த கூட்டத்தொடர் கண்டது. நாட்டின் பல இடங்களிலும் நல்ல பருவ மழை பெய்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் பல இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் உயிர்களை இழந்தோரது குடும்பத்தினருடன் என் எண்ணம் செல்கிறது. அவர்களுக்கு என் ஆழ்ந்த் அனுதாபங்கள்.

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தின் படி அனைவருக்கும் சமூக நீதி உள்ளது. இதனை உறுதி செய்து இந்தியா அதிவேகமாக வளர்ச்சி பெறுவதை உறுதி செய்வோம். ஏழைகளுக்கு நீதி கிடைக்கும். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது மறைமுகத் தாக்குதல் தொடுத்த மோடி, “2013 ஆண்டு பின்னோக்கி இருந்த நமது நாட்டின் வளர்ச்சி இன்று முன்னேற்றமடைந்துள்ளது. 2013 போல் கழிவறைக் கட்டுவதோ, நாடு முழுதும் மின்சாரம் அளிக்கும் திட்டமோ நடந்திருந்தால் இன்னும் பத்தாண்டுகள் ஆகியிருக்கும் அவற்றை முடிக்க, ஆனால் அதனை இப்போது சாதித்திருக்கிறோம் என்பதில் பெருமை அடைகிறோம். எங்கிருந்து நாம் ஆரம்பித்தோம் என்று யோசித்தால் நம்பமுடியாத இடங்களுக்கு நாடு சென்றுள்ளதை நாம் கண்டுணர முடியும்.

புதிய தொழில்நுட்பத்துடன் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர்.சுய வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முத்ரா திட்டமித்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்டதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தொழிலதிபர்கள் லாபம் ஈட்டி வருகின் றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார ஆபத்தில் இருந்து நாடு மீண்டுள்ளது.

சாலை, வான்வெளி, கடல்வெளி ஆகிய அனைத்திலும் தன்னிறைவு அடைந்து வருகிறோம். நாட்டின் கடைக்கோடி கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புக்களால் நமது விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்தியாவின் குரலை உலக நாடுகள் கேட்க துவுங்கி உள்ளன. விவசாயித்திலும் விஞ்ஞானத்தை இணைத்து வெற்றி காண்பதே இந்திய அரசின் குறிக்கோள். reform, perform and transform (சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்) இதுவே மத்திய அரசின் தாரகமந்திரம். 2022 க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல் படுத்தப்படும். இந்தியா என்ற யானை உறங்கிக் கொண்டிருந்த நிலை மாறி விட்டது. இப்போது யானை எழுந்து விட்டது. முதலீடுகள் மற்றும் தொழில்துவங்குவதற்கு ஏற்ற நாடாக இந்தியா மாறி உள்ளது.

வடகிழக்குப் பகுதிகள் சமீப காலங்களாக நாட்டுக்கே தூண்டுதலாகத் திகழ்கின்றன. ஒரு காலத்தில் டெல்லியிலிருந்து அவை நீண்ட தொலைவில் எட்ட முடியாத தொலைவில் இருந்ததாகக் கருதப் பட்டது. இப்போது அவைகளை நாம் டெல்லியின் வாசற்படிக்குக் கொண்டு வந்துள்ளோம்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி பேர் வறுமைகோட்டிற்கு மேல் வந்துள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். நேர்மையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் இருமடங்காகி உள்ளது. மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கே உங்களின் வரிப்பயணம் பயன்படுத்தப்படுகிறது.

விளையாட்டு முதல் பார்லி., வரை பெண்களின் பங்கு பெருமைக்குரியது. சுப்ரீம் கோர்ட்டில் தற்போது 3 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பெண்கள் நாட்டை பெருமை அடையச் செய்துள்ளனர். பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. முத்தலாக் முறை முஸ்லிம் பெண்களுக்கு பெரிய அநீதி இழைத்து வருகிறது, நாங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்கிறோம். ஆனால் சிலர் அது முடியக் கூடாது என்று விரும்புகின்றனர். முஸ்லிம் பெண்களுக்கு உறுதி அளிக்கிறேன், உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பாடுபடுவேன்.

ஊழல்வாதிகளுக்கும், கறுப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பு இல்லை. கறுப்பு பணம் பதுக்வோரையும், ஊழல்வாதிகளையும் தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. பாலியல் குற்றங்கள் செய்வோர் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. பெண்களை மதிக்க பெற்றோர் கற்றுத்தர வேண்டும். ஆண்களைப் போல் பெண்களும் நிரந்தர அதிகாரம் பெறுவார்கள். நாட்டின் நலன் கருதியே அரசு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.

மேலும் நாட்டில் உள்ள 10 ஏழை குடும்பங்கள், 50 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறும் உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.

கடந்த 4 ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசு நாட்டில் உள்ள ஏழைகளின் முன்னேற்றத்துக் காக உழைத்து வருகிறது. அவர்களுக்கு முழுமையான மருத்துக் காப்பீடு திட்டம் கிடைக்கும் வகை யில், பண்டிட் தீனதயால் உபாத்யாயா பிறந்தநாளான செப்டம்பர் 25-ம் தேதி பிரதமர் ஜன் ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படும்.

பாஜக அரசு அறிமுகம் செய்ய இருக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் உலகிலேயே மிகப் பெரிய காப்பீடு திட்டமாகும். இந்த திட்டத்தில் நாட்டில் உள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்கள், 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் ஆண்டு தோறும் மருத்துவக் காப்பீடு கிடைக்கும்.

இன்றில் இருந்து, அடுத்து 4 முதல் 5 வாரங்களுக்கு இந்தத் திட்டம் சோதனை முயற்சியாகத் தொடங்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால், அவர் மட்டும் பாதிக்கப்படவில்லை, ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்படுகிறது.

இதற்காகத்தான், ஏழை மக்களின் நலனுக்காக இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. இந்த திட்டத்தில் ஏழை மக்களுக்கும், சாமானிய மக்களுக்கும் நல்ல தரமான மருத்துவ சிகிச்சைகள், வசதிகள் கிடைக்கும், மிகப் பெரிய மருத்துவமனைகளில், தீவிர உடல்நலக்குறைபாட்டுக்கு இலவசமாகச் சிகிச்சை மேற் கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தின் நோக்கமே ஏழை மக்கள், உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் போது, சிகிச்சைக்காக யாரிடமும் பணத்துக்காக கையேந்தக் கூடாது. மேலும், இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப்படும் போது, ஏராளமான இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் குறிப்பாக நடுத்தர மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய மருத்துவமனைகள் திறக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் நாட்டில் கிராமப்பகுதிகளில் உள்ள 8.03 கோடி மக்களும், நகர்ப்புறங்களில் உள்ள 2.33 கோடி குடும்பங்களும் பயன்பெறுவார்கள். ஒட்டுமொத்த அமெரிக்க, கனடா, மெக்சிக்கோ மக்கள் தொகைக்கும் கிடைக்கும் மருத்துவ சிகிச்சையின் அளவைப் போல் மிகப்பெரிய திட்டமாகும்.

ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்க வேண்டும், அவர்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்பதைத்தான் எனது அரசு கடந்த 4 ஆண்டுகளாகச் செய்து வருகிறது.

எந்த ஏழை மக்களும் வறுமையில் வாழ்வதை விரும்பவில்லை, வறுமையில் சாவதையும் விரும்பவில்லை.

சர்வதேச நிறுவனங்களின் ஆய்வறிக்கையில் கடந்த 2 ஆண்டுகளில் இந்திய ஏழைகளில் 5 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்த 22 மாநில அரசுகள் முன்வந்துள்ளனர். இந்தத் திட்டத் துக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான முறைப்படி யான பணியை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்து வருகிறது

இவ்வாறு பிரதமர் மோடி தன் உரையில் குறிப்பிட்டார்.