மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் புதிய கல்வி கொள்கை!- மோடி பேச்சு!
21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆளுநர்கள் மாநாடு காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொணடு உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத் கோவிந்த், புதிய கல்விக் கொள்கையை மாநிலங்களில் அமல்படுத்த அது சார்ந்த மாநாடுகளை நடத்த ஆளுநர்களை கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
புதிய கல்வி கொள்கையின் பல்வேறு கூறுகளைப் பற்றி விரிவாக ஆலோசித்தப் பிறகு, கருத்துக்களை கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய மொழிகள், கலை மற்றும் கலாச்சாரத்துக்கு தேசிய கல்வி கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள ராம்நாத் கோவிந்த், படைப்பாற்றலை மாணவர்களிடயே இது மேம்படுத்தும் என தெரிவித்தார். நீண்ட நொடிய ஆலோசனைகளுக்கு பிறகு புதிய கல்விகொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய இளைஞர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்ய தேசிய கல்வி கொள்கை உதவும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-
கல்வி கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தேசிய கல்வி கொள்கை வடிவத்தை முடிவு செய்து நாம் முன்னேறி செல்ல வேண்டும். கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த 100 ஆண்டுகளில் இருந்த பிரச்சினை களுக்கான தீர்வு இந்த கல்வி கொள்கையில் உள்ளது. மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
எது நமது மூளையை சுதந்திரமாக செயல்பட வைக்கிறதோ அதுவே அறிவு. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள், கல்வி கொள்கையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் தேர்வு சுமையில் இருந்து தீர்வு காணப்பட்டுள்ளது.
Everybody wanted to see changes & improvements in the education policy, this is why #NewEducationPolicy2020 is being accepted by all. Discussions are being held over its implementation – PM @narendramodi #NEP2020 pic.twitter.com/ZI8Lv6o1cm
— PIB India (@PIB_India) September 7, 2020
கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பெரும்பாலான மாநிலங்கள் கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. தேசிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.