August 13, 2022

பிரதமர் மோடியின் மான் கீ பாத் உரையில் சென்னை டாக்டருக்கு புகழஞ்சலி!

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமையன்று, அகில இந்திய வானொலி யில், மான் -கீ -பாத் (மனதின் வார்த்தைகள்) என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 51 -வது முறையாக அவரது உரை ஒலி பரப்பானது.

அதன்படி மோடியின் இன்றைய ரேடியோ உரையில் மோடி, “நாட்டு மக்களுக்கு வணக்கம். 2018-ம் ஆண்டு முடியப் போகிறது. நாம் விரைவில் 2019-ம் ஆண்டை எதிர் கொள்ளவுள்ளோம். அனைவருக் கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்திய நாட்டு மக்களின் கூட்டு முயற்சியால், நாம் இந்த ஆண்டு பெற்றது ஏராளம். 2018-ம் ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் நல்ல விஷயங்களை நிரப்பி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒற்றுமையின் சிலையும், உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்க ளுக்கும் மின்சாரம் சென்று அடைந்துள்ளது. எளிதாகத் தொழில் செய்யும் நாடுகளில் குறித்த தரவரிசையில் நம்நாடு முன்னேறி இருக்கிறது. ஸ்வச் பாரத் திட்டம் வெற்றி அடைந்து 95 சதவீத மக்களை நோக்கிச் சென்றுள்ளது.

இந்தியாவில் சிக்கிம் முதல் விமான நிலையத்தையும், வாரணாசியில் கங்கை நதிக்கரையில் புதிய போக்குவரத்தையும் தொடங்கி வைத்தோம். ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய வீரர்கள், வீராங்கனை கள் அதிகமான பதக்கங்களை வென்றுள்ளார்கள்.

இந்த முன்னேற்றம் 2019 ஆம் ஆண்டும் தொடரும் என்று நம்புகிறேன். வரும் ஆண்டு நம்முடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை மேற்கொள்ள நாம் உறுதி எடுக்க வேண்டும். அதே நேரத்தில் நம் நாட்டை, சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் நம் பங்களிப்பு இருக்க வேண்டும்.

என் மக்களே, இந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரு மிகச் சிறந்த மற்றும் அற்புதமான மனிதரை நம் நாடு இழந்துள்ளது. டிசம்பர் 19-ம் தேதி மருத்துவர் ஜெயசந்திரன் சென்னையில் காலமானார். ‘மக்கள் மருத்துவர்’ என்றுதான் அவர் அழைக்கப்படுவர். மக்கள் மனதில் அவருக்கு எப்போதும் ஒரு தனி இடம் உள்ளது.

மிகவும் ஏழ்மையான மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ததன் மூலம்தான் அவர் வெளியில் அறியப்பட்டார். ஜெயசந்திரன் எந்த நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தயாராக இருப்பார் என சிலர் என்னிடம் கூறியுள்ளனர். வயதான நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று சிகிச்சையளிப்பார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.

அதேபோல் டிசம்பர் 25-ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுலகிட்டி நரசம்மாவும் காலமானார். நரசம்மா ஒரு மருத்துவச்சி. அவர் மகப்பேறு பார்ப்பதில் மிகவும் திறமையானவர். கர்நாடகாவில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கும் சென்று இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகப்பேறு சேவை செய்துள்ளார். இதற்காக இந்த வருடம் தொடக்கத்தில் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்

bளது.

இந்த வருடம் தூய்மை இந்தியா திட்டத்துக்கான பிரசாரம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமையாக தெரிவிக்கிறேன். இந்த வருடம் மட்டும் சுமார் மூன்று லட்சம் பேர் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்பட்டுள்ளனர். நம் நாட்டில் பல மதத்தினர் பல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். அனைவரும் தங்கள் விழாவின் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அப்போதுதான் நம் நாட்டில் எவ்வளவு விழாக்கள் கொண்டாடப்படுகிறது என்பதும் நம்முடைய கலாச்சாரமும் வெளியில் தெரியும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நேர்மறை விஷயங்களை பரப்ப முயல்வோம். நமது நாட்டின் நாயகர்களைப் பற்றி எடுத்துரைப்போம்” என்றார்.

அடிசினல் ரிப்போர்ட்:

பிரதம மோடியில் இந்த உரையை கேட்க வசதியாக, உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு கட்சி நிர்வாகம் சார்பில் ரேடியோக்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

கருத்துகளை பகிர்வது, பாடல்கள் கேட்பது, விடியோ பதிவுகளை பார்ப்பது, புகைப்படம் எடுத்து கொள்வது என எல்லாமே இன்று மொபைல்ஃபோன் என்று ஆகிவிட்ட நிலையில், பிரதமரின் வானொலி உரையை கேட்க பாஜக தொண்டர்களுக்கு ரேடியோ வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.