இப்ப நடப்பதா எமெர்ஜென்சி! – மோடி ரேடியோவில் டவுட்

இப்ப நடப்பதா எமெர்ஜென்சி! – மோடி ரேடியோவில் டவுட்

பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3–ஆம் தேதியன்று வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் முதன்முறையாக உரையாடினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று காலை 11 மணியளவில் ஒலிபரப்பாகிய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

modi

அப்போது அவர் பேசியதாவது:

* விவசாயிகள், விஞ்ஞானிகளின் உழைப்பால் நாடு புதிய வளர்ச்சியை கண்டுள்ளது. நாடு பருவ மழை பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கின்றன. நல்ல பருவமழை இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். விவசாய சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

* விமானப்படையில் பெண்கள் இணைந்து பணி புரிவது பெருமை அளிக்கிறது. விமானப்படையில் இணைந்த பெண்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

* உலகில் இஸ்ரோவுக்கு சிறப்பான இடம் கிடைத்துள்ளது. இதனால், விண்வெளி ஆராய்ச்சி என வரும் போது, உலகம் நம்மை கவனிக்கிறது. சென்னை, புனே மாணவர்கள் தயாரித்த இரண்டு செயற்கைக்கோள்கள், நம்மை பொறுத்தவரை முக்கியமானது சிறப்பு வாய்ந்தவை .விஞ்ஞானிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல கடுமையாக உழைத்து வருகின்றனர்.
*அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்தியாவுக்கு 99 சதவீதம் அனுமதி கிடைத்துள்ளது.

* சர்வதேச யோகா தினத்தை உலகம் சிறப்பாக கொண்டாடியது. உலகம் மற்றும் இந்தியா முழுவதும் யோகாவை பலர் செய்தனர். உலகம் முழுவதையும் இணைக்கும் திறன் யோகாவுக்கு உள்ளது. டுவிட்டரும் யோகாவுக்காக பல செய்திகளையும் படங்களையும் வெளியிட்டது. ஐநாவில் யோகா சின்னம் பொறிக்கப்பட்டது பிரபலமானது. சர்க்கரை நோயை கட்டுப்படு்த்த யோகா எப்படி பயன்பட்டது என்பதை மக்கள் தெரிவிக்கலாம்.

* இந்த நிகழ்ச்சியை பலர் விமர்சனம் செய்கின்றனர் இதற்கு காரணம் நாம் ஜனநாயகத்தில் இருப்பது, 1975 ஜூன் 25,26ம் தேதியை யாராவது நினைவில் கொள்ளுங்கள். ஜனநாயகமே நமது பலம். ஜனநயகத்தை நாம் தொடர்ந்து வலிமை யாக்குவோம். 1975 ஜூன் 26 இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாளாக அமைந்தது. நாடு எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. நாடே சிறைச்சாலையாக மாறியது. ஜெயபிரகாஷ் நாராயன் உள்ளிட்ட பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு காலத்தில் மக்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன. ஆனால் தற்போது அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கின்றனர். ஜனநாயகம் நமக்கு பெருமையளிக்கிறது. குடிமகன்களை வலிமைப்படுத்துகிறது. ஜனநாயகத்தில் மக்களின் அதிகாரத்தை பற்றி கவனத்தில் வைத்திருக்க வேண்டும். நாம் மக்களை ஒற்றுமைபடுத்த வேண்டும்.

*வருமான வரி கட்டாதவர்களுக்கு அரசு சிறப்பு சலுகை அளித்துள்ளது செப்., 30 வரை தங்களது சொத்து விபரத்தை தெரிவிக்கலாம் . இவ்வாறு மோடி பேசினார்.

Related Posts

error: Content is protected !!