மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது இதுதான்!- வீடியோ!
பண்டிகைகளின் போது கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். ஆறடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இன்றைய மனதின் குரல் (மான் கி பாத்) 70வது வானொலி நிகழ்ச்சி உரையில் பிரதமர் மோடி பேசியதன் சாராம்சம்:
நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். துர்க்கை பண்டிகையின்போது முன்பெல்லாம் ஏராளமானவர்கள் விழா பந்தலில் கூடுவது வழக்கம். ஆனால் இந்தமுறை அத்தகைய போக்கை நாம் கடைப்பிடிக்கவில்லை. அதேபோல ராம் லீலையும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் இப்பொழுது ராம்லீலா விழாவும் கட்டுப்பாடுடன் நடைபெற்றது. வரும் நாட்களில் ஈத், ஷரத் பூர்ணிமா, வால்மீகி ஜெயம் பி தண்டிஸ்ரஸ், தீபாவளி, சாத்து பூஜை, குருநானக் தேவ் ஜெயந்தி ஆகிய பண்டிகைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாம் கட்டுப்பாடோடு பண்டிகைகளை கொண்டாட வேண்டும். பண்டிகை கொண்டாட்டங்களின் போது தனி மனித இடைவெளியைக் கடை பிடிப்போம். காதி விற்பனை நிலையத்தில் விற்கப்படும் முகக் கவசங்களை மக்கள் அதிகம் வாங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம். விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்தாண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் பொருட்கள் வாங்கும்போது, உள்நாட்டு பொருட்களுக்கும் முக்கியத்துவம் அளிப்போம். ekbharat.gov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் ஊட்டச்சத்து மிக்க உள்ளூர் உணவு செய்முறையை பகிர்ந்துகொள்ள வேண்டும்
How is a place in Mexico linked to Khadi?
Find out more about this very interesting effort… #MannKiBaat pic.twitter.com/kaU0FM6RIX
— Narendra Modi (@narendramodi) October 25, 2020
பண்டிகைகளைக் கொண்டாடும் பொழுது நமக்கு ஊரடங்கு காலம் மனதில் தோன்ற வேண்டும். ஊரடங்கு அமலில் இருந்த பொழுது யார் நமக்கு உதவியவர்கள் யார், நமக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்று எண்ணிப்பாருங்கள், சுகாதாரத்துறை தொழிலாளர்கள், வீடுகளை பராமரிப்பவர்கள், காவலர்கள் எல்லோரும் நம்மோடு ஊரடங்கு காலத்தில் இருந்தவர்கள். இப்பொழுது நாம் அவர்களையும் பண்டிகை காலத்தில் இணைத்துக்கொண்டு கொண்டாட வேண்டும். கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்.
இந்த பண்டிகை காலங்களில் கூட நம் எல்லைகளை காக்கும் நம் துணிச்சலான வீரர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவற்றை நினைவில் வைத்த பின்னரே நாம் கொண்டாட வேண்டும். நம் இந்தியாவின் இந்த துணிச்சலான மகன்களுக்கும் மகள்களுக்கும் நாம் ஒரு விளக்கு ஏற்ற வேண்டும். முழு தேசமும் அவர்களுடன் உள்ளது.
இன்றைய உரையின் இடையே தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தும் பொன் மாரியப்பன் என்பவரிடம் பிரதமர் மோடி தமிழில் பேசினார்.
தூத்துக்குடியில் தமது முடி திருத்தும் நிலையத்தில் ஒரு நூலகத்தை நிறுவியுள்ளார் பொன் மாரியப்பன். இந்த எண்ணம் எப்படி வந்தது என அவரை செல்போனில் தொடர்புக் கொண்டு பிரதமர் மோடி வினவி பாராட்டியுள்ளார். அவரிடம்தூத்துக்குடி பொன். மாரியப்பன் பேசும்போது தான் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்ததால் வாழ்க்கையை படிக்க நூலகம் அமைத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், உங்களுக்கு எந்த புத்தகம் பிடிக்கும் என மாரியப்பனிடம் பிரதமர் தமிழில் கேள்வி கேட்டார். வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டும். வாழ்க்கைக்கான வழிகாட்டி நூல் ‘திருக்குறள்’ என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.