காக்கி சீரூடையின் மரியாதையை இழக்க அனுமதிக்காதீர்கள் – மோடி அட்வைஸ் – வீடியோ!

காக்கி சீரூடையின் மரியாதையை இழக்க அனுமதிக்காதீர்கள் – மோடி அட்வைஸ் – வீடியோ!

‘உங்கள் சீருடையை நினைத்து பெருமைப்படுங்கள்; காக்கிச் சட்டையின் மரியாதையை இழக்க அனுமதிக்காதீர்கள்’ என்று போலீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ். ஆக தேர்வு செய்யப்பட்ட 28 பெண்கள் உள்பட 131 பேருக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஐ.பி.எஸ். தகுதிகாண் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதில் சட்டம், விசாரணை, தடயவியல், தலைமைப்பண்பு, மேலாண்மை, குற்றவியல், தடயவியல், பொது ஒழுங்கு, உள்நாட்டு பாதுகாப்பு, மனித உரிமைகள், தந்திரோபாயங்கள், ஆயுத பயிற்சி, நவீன இந்திய காவல்துறை, துப்பாக்கிச்சுடுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முதல் கட்டமாக நடந்த 42 வார அடிப்படை பயிற்சியை அவர்கள் முடித்து உள்ள நிலையில் இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் ‘திக்சந்த் பாரடே’ அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று ஐ.பி.எஸ். தகுதிகாண் பயிற்சி பெற்றவர்களுடன் கலந்துரையாடினார்.

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதன் சாராம்சம்:

பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளை நான் நேரில் சந்திப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, கொரோனா காரணமாக அது முடியவில்லை. அதேநேரத்தில், எனது ஆட்சி காலத்திற்குள், உங்களை நேரடியாக சந்திப்பேன் என உறுதியாக நம்புகிறேன்.

விவசாயிகள் உட்பட அனைவருக்கும் பணிச்சுமை மற்றும் நெருக்கடிகள் அதிகம். இது வாழ்க்கையின் ஒரு அங்கம் தான். இது சரி செய்ய முடியாதது அல்ல. நமது தேவை மற்றும் கடமையை விரிவாக தெரிந்து கொண்டால், இந்த பிரச்னையை சமாளித்துவிடலாம். உங்கள் துறையில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் போதும், அதனை சமாளித்து விட முடியும்.

வழக்கமான பயிற்சியும் முக்கியமானது. பணியாற்றசெல்லும் போது, இது குறித்து பேசும் மக்கள் ஆசிரியர்களை சந்தித்து விரிவாக பேசுங்கள். அது உங்களுக்கு நெருக்கடி இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். யோகா மற்றும் பிராணயமும் செய்யும் போது, உங்களுக்கு நெருக்கடி ஏற்படாது. எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.எந்த பணியும். உங்களுக்கு பலனை அளிக்கும். எவ்வளவு பணியை செய்தாலும் அது உங்களுக்கு நெருக்கடியை தராது.

போலீசார் எப்போதும் அடிப்பார்கள் என மக்கள் நினைக்கின்றனர். அதனால், நீங்கள் மனிதநேய பணியாற்றவில்லை என்பது அர்த்தமில்லை. போலீசாரின் பணியை, சமூகம் எப்போதும் உணர்ந்தது இல்லை. கொரோனா காலத்தில், காக்கி உடை அணிந்த போலீசாரின் பணியை மக்கள் பார்த்துள்ளனர். இந்த காலகட்டத்தில், வீடில்லாதவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கியுள்ளனர். நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதுடன், கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

போலீசாரின் மனிதநேய அணுகுமுறை குறித்து மாணவர்களை கடிதம் எழுத செய்ய பள்ளிகள் முன்வர வேண்டும். அதனை ஆன்லைன் தளத்தில் வெளியிடலாம். உங்கள் சீரூடைக்கு உள்ள அதிகாரத்தை நினைத்து பெருமைப்படாமல், உங்கள் சீருடையை நினைத்து பெருமைப்படுங்கள் காக்கி சீரூடையின் மரியாதையை இழக்க அனுமதிக்காதீர்கள்.”இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்நிகழ்ச்சியின் போது தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம் பிரதமர் மோடி பேசினார். கிரண் ஸ்ருதியின் பூர்வீகம் குறித்தும், அவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனார் என்பது குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது கிரண் ஸ்ருதியிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, நீங்கள் ஏன் ஐபிஎஸ் ஆனீர்கள் என்று கேட்டார். அதற்கு கிரண் ஸ்ருதி, ’எனக்கு கிரண் பேடி போல ஆக வேண்டும் என்று ஆசை. கிரண் ஸ்ருதி என் பெற்றோரும் அதனால்தான் எனக்கு கிரண் என்று பெயர் வைத்தனர். சின்ன வயதில் இருந்து நான் ஐபிஎஸ் கனவோடு படித்தேன். அதே கனவோடு என்னை தயார்படுத்திக் கொண்டேன்’ என்றார்.

அதன்பின், ஏன் என்ஜினியரிங் படித்துவிட்டு ஐபிஎஸ் துறையை தேர்வு செய்தீர்கள் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கிரண் ஸ்ருதி, எனக்கு சீருடை அணிந்து சேவையாற்ற வேண்டும் என்று ஆசை. ஆசை என்ன மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று ஆசை. எனது பணியை நான் சிறப்பாக செய்வேன், மக்களுக்காக உழைப்பேன் என்று கிரண் ஸ்ருதி கூறினார்.

error: Content is protected !!