தமிழ்நாட்டுக்கு புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்தபடி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில் காணொலி காட்சி மூலம் இன்று மாலை திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.
இதற்காக, மொத்தம் ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.2,145 கோடி அடங்கும்.
ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் சுமார் 100 முதல் 150 மாணவர் வரை மொத்தம் 1,450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவக் கல்வி படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரிகளைத் திறந்தார்
இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் நரேந்திர மோடி விருதுநகரில் இன்று நடைபெற இருந்த பிரமாண்ட விழாவில் நேரில் பங்கேற்று தொடங்கி வைப்பார் என்றும், இந்த விழாவில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலினும் கலந்துகொள்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று திடீரென அதிகமாக பரவுவதால் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து மருத்துவக் கல்லூரிகளை திறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அதனால் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்தபடி காணொலி காட்சி மூலம் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் திறந்து வைத்து, உரையாற்றினார்.
தமிழக சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்,
தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை கூறி பிரதமர் மோடி தனது உரையைத் தொடர்ந்தார்
தமிழகத்தில் 11 புதிய #மருத்துவக்கல்லூரி களை, பிரதமர் #நரேந்திரமோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.@PMOIndia
@CMOTamilnadu pic.twitter.com/IZBbOXQnII— Àanthai Répørter™ 👀🦉 (@aanthaireporter) January 12, 2022
இவ்விழாவில், தமிழ்நாடு தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.
புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய வீடியோ லிங்க் இதோ