October 24, 2021

இந்த தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்! – மோடி ரேடியோ பேச்சு

தீபாவளி விளக்குகள் எடுத்துக்கூறுகின்றன. உலகம் சுற்றுச்சூழல் பற்றி இன்று பேசுகிறது. நமது பண்டிகைகள் எப்போதும் இயற்கையுடன் தொடர்புடையவை. சுற்றுச்சூழல் மாசுபாடு தற்போது சர்வதேச கவலையாக உள்ளது. இதனிடையே நமக்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை  அர்ப்பணிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

modi oct 30

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: சுத்தத்துடன் தீபாவளி பண்டிகை தொடர்புடையது. அன்று, ஏழை மற்றும் பணக்காரர் என வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தங்களது வீடுகளை சுத்தப்படுத்துகின்றனர். வறுமை, கல்வியறிவு, சமூக கொடுமைகள் போன்ற இருள் நீங்குவதற்கான முயற்சிக்கான செய்தியை தீபாவளி விளக்குகள் எடுத்துக்கூறுகின்றன. உலகம் சுற்றுச்சூழல் பற்றி இன்று பேசுகிறது. நமது பண்டிகைகள் எப்போதும் இயற்கையுடன் தொடர்புடையவை. சுற்றுச்சூழல் மாசுபாடு தற்போது சர்வதேச கவலையாக உள்ளது. வேத காலம் முதல் பண்டிகைகள், இந்தியாவில் சமூகத்தில் தொடர்ச்சியாக மாற்றம் கொண்டு வந்துள்ளது. நமது நேரம் காலத்திற்கேற்ப சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம்

தீபாவளியானது தூய்மைப்பணியை குறிக்கிறது. இந்த முறை உங்கள் அருகாமையில் உள்ள இடங்கள், கிராமங்களை தூய்மைபடுத்துங்கள். தூய்மை பணியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும். குழபந்தைகள் பட்டாசு வெடிப்பதை பெரியவர்கள் கவனிக்க வேண்டும். அறிவுரை வழங்க வேண்டும். தீபாவளி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை மக்களை ஒருங்கிணைத்துள்ளது.

ராணுவ வீரர்களின் தியாகங்கள் நமது மனதை தொடும் அவர்களை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம். நமது வீரர்களை நினைவுபடுத்த வேண்டிய நேரம் இது. நமக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு தீபாவளி பண்டிகையை அர்ப்பணிக்க வேண்டும். நமது வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய மக்கள் செய்தி அனுப்பியுள்ளனர். மக்களின் குறுஞ்செய்திகள் வீரர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. நாம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் நமது வீரர்கள், நமது மண்ணை, பாலைவனத்தை தொழிற்சாலைகள், விமான நிலையங்களை பாதுகாக்கிறார்கள். பிஎஸ்எப், சிஆர்பிஎப் ஆகிய வீரர்கள் பணியில் உள்ளனர். நம்மை பாதுகாக்கின்றனர். இதனால் நாம்  மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுகிறோம். நமது பாதுகாப்பு படையினருக்கு ஆதரவு மற்றும் வாழ்த்து செய்தி அனுப்பி அன்பு காட்டிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

பல மாநிலங்கள் திறந்த வெளி கழிப்பிடத்தை மாற்ற பல நடவடிக்கை எடுத்துள்ளன. இமாச்சல பிரதேசம், சிக்கிம் முன்னுதராரணமாக உள்ளன.இதில் கேரள மாநிலம் விரைவில் இணையும். கேரளாவில் இதற்காக கடுமையாக உழைத்த மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அரியானா மாநிலம் 7 மாவட்டங்களில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லை என அறிவித்துள்ளது. குஜராத்தில் 150 நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லை என அறிவித்துள்ளது

அரியானா மாநிலம் மண்ணெண்ணை இல்லா மாநிலமாக மாறியுள்ளதற்கு பாராட்டுகள்.ஏழை மக்களின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும். ஏழைகளின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வேறுபாட்டை நிறுத்த வேண்டும். நாளை நாம் படேல் பிறந்த நாள் கொண்டாடுகிறோம். இந்திரா நினைவுநாள் நாளை வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.நேரடி மானிய திட்டத்தின் மூலம், இடைத்தரகர்கள் பிரச்னை ஒழிக்கப்பட்டது என்றார்.