October 5, 2022

சத்குருவை நெக்குருகி பாராட்டிய பிரதமர் மோடி!

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். இந்த விழாவில் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தராராஜே சிந்தியா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

modi feb 26

இந்த ஈஷா மையம் காட்டை அழித்து கட்டிடம் கட்டி வருவதாகவும், குறிப்பாக இந்த சிலை கூட உரிய அனுமதி வாங்காமல் கட்டப்பட்டது என்பதால் பிரதமர் மோடி விழாவுக்கு வரக் கூடாது என்று சிலர் பலத்த எதிர்ப்பு காட்டியதால் விழா நடக்கும் இடத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தனி விமானத்தில் கோவை வந்த பிரதமர் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள தியான மண்டபத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து தியான லிங்கத்திற்கு தீபாராதனை காட்டி தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிவன் சிலையை ஜோதி ஏற்றி வைத்து திறந்து வைத்தார் பிரதமர் மோடி தொடர்ந்து விழாமேடையில் உடுக்கை அடித்தார்

பின்னர் பேசிய மோடி தன் உரையில், “எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் மகாதேவர் ஒருவர் தான். எத்தனையோ மந்திரங்கள் இருந்தாலும் மகா ம்ருத்யுஞ்சய மந்திரம்தான் சிவனுக்கு உகந்தது. எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் மகா என்ற எழுத்துடன் தொடங்குவது மகா சிவராத் திரிதான். இருளைப் போக்கி வெளிச் சத்தைக் கொண்டு வருவதுபோல, அநீதியை ஒழிப்பதை உணர்த்து கிறது மகா சிவராத்திரி.

பல நூறாண்டுகளாக ஞானிகள் வாழ்ந்துள்ளனர். வெவ்வேறு இடங் களில் இருந்து ஞானிகள் வந்துள்ளனர். அவர்களது மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் தெய்வீக நோக்கம் ஒன்றுதான். இங்கு 112 அடி உயர ஆதியோகி சிலையின் முன்பு நிற்கும்போது மகத்தான இருப்பு நம் அனை வரையும் அரவணைப்பதை உணர முடிகிறது. தற்போது யோகா பல எல்லைகளைக் கடந்து வந்துள் ளது. யோகாவுக்காக தற்போது பல்வேறு பள்ளிகள், பயிற்று முறைகள் இருந்தாலும் யோகா என்பது நிலையானது. யோகா புராதனமானது. ஆனால் நவீன மானது. அது வளர்ந்து கொண்டே இருக்கிறது. யோகாவின் சாரம் இன்னும் மாறவே இல்லை. இந்த சாரத்தை பேணிக்காப்பது மிகவும் முக்கியமானதாகும்.

சிவனை நினைக்கும்போது கயிலாய மலையும், பார்வதியை நினைத்தால் கன்னியாகுமரியும் நினைவுக்கு வரும். எனவே, சிவசக்தி சங்கமம் என்பது மலைகள் மற்றும் கடல்களின் சங்கமமாக அமைந்துள்ளது. இதுதான் நம் நாட்டின் ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது. சிவன் குடும்பமே வேற்றுமையில் ஒற்றுமை என்ற மரபைக் காட்டுகிறது. கடவுள்கள் அனைவரும் விலங்கு, பறவை, மரத்துடன் இணைந்துள்ளனர். கடவுளை வணங்கும்போது அவற்றையும் வணங்குகிறோம். அதனால்தான் ஒருமை உணர்வு, கனிவு, சகோதரத் துவத்துடன் வாழ்கிறோம். இந்தப் பண்பாட்டுடன்தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து மறைந் துள்ளனர்.

இந்த தேசத்தில் பெண்மைக்கு முக்கியத்துவம் தருவது பாராட்டுக் குரியது. பல இறைவிகளும், பெண் துறவிகளும் நம்மை வழிநடத்தியுள்ளனர். இனி பெண்கள் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவதுடன், பெண்கள் தலைமைப் பண்பை ஏற்பது குறித்துதான் பேச வேண்டும். பெண்களை மதிக்கும் சமூகமே மேன்மை அடையும்.

யோகா என்பது சிறந்த அறிவியல். நமது உடலை, மனதை மேம்படுத்தும் சக்தி கொண்டது. உலகம் முழுவதும் யோகா பரவி வருகிறது. நமது மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகத் திகழ்கிறது. எனவேதான், யோகாவைப் பரப்புகிறோம். ஈஷா யோகா மையத்தில் சாதாரண மனிதர்களை யோகி களாக ஆக்குவது பாராட்டுக்குரியது. கூலி வேலைக்குச் செல்பவர்கள் கூட தங்களது அன்றாட வாழ்க்கையில் யோகாவைப் பின்பற்றுவதற்கு சத்குரு ஒரு காரணமாக அமைந்துள்ளார் ” என்றார்.