இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டும் 50 மில்லியன் அமெரிக்க டாலர் – பிரதமர் மோடி அறிவிப்பு!

இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்  – பிரதமர் மோடி அறிவிப்பு!

இலங்கையின் வளர்ச்சிக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியளித்து உதவுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதில், இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை இந்திய பிரதமர் மோடி அறிவித்தார்!

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பயணத்தின் முக்கிய அம்சமாக, டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரை, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில், இந்திய நிதியுதவியில் தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டம், திரிகோண மலையில் எண்ணெய் கிடங்கு, தமிழர் பகுதியை இணைக்கும் ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. உள்நாட்டு போரில் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த ஊரில் குடியமர்த்தும் திட்டத்தை தொடர வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

விடுதலை புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் போர் குற்றம் நடந்தது தொடர்பான விசாரணை, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை போன்ற அம்சங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜ பக்சேவுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை வரவேற்கும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் முப்படையும் அணி வகுத்தனர். குடி யரசு தலைவர் மாளிகைக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.

இதனிடையே டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவர் பேசிய போது, “‘இருநாட்டு உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய அரசுக் கும் ,என்னை அழைத்த பிரதமர் மோடிக்கும் நன்றி. பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்’ என்றார்.இதைத் தொடர்ந்து ராஜ்காத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் கோத்தபய ராஜபக்சே மரியாதை செலுத்தினார்.

இப்பயணத்தின் முக்கிய அம்சமாக, டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரை, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில், இந்திய நிதியுதவியில் தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டம், திரிகோண மலையில் எண்ணெய் கிடங்கு, தமிழர் பகுதியை இணைக்கும் ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. உள்நாட்டு போரில் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த ஊரில் குடியமர்த்தும் திட்டத்தை தொடர வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

விடுதலை புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் போர் குற்றம் நடந்தது தொடர்பான விசாரணை, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை போன்ற அம்சங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் சந்தித்து பேசினர்.  அதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  பேசிய பிரதமர் மோடி,“இலங்கையும் இந்தியாவும் ஒரு வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியா வுக்கு மிகவும் அருகில் உள்ள நாடு என்பதன் அடிப்படையில், இலங்கை உடனான எங்கள் உறவுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ராணுவரீதியாக இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படும். இலங்கையில் நடக்கும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட, அந்நாட்டுக்கு 50 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக 400 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வீட்டுத் திட்டத்தின்கீழ், இலங்கையில் ஏற்கெனவே 46,000 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. அங்குள்ள தமிழ் மக்களுக்காக மேலும் 14,000 வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன. இலங்கை மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். இரு நாடுகளுக்கும் இடையே கடல்வழி வணிகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை அரசு அந் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வழங்கும் என நம்புகிறேன்” என்றார் பிரதமர் மோடி.

இதையடுத்து, இந்தியப் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு கோத்தபய அழைப்பு விடுத்தார். “ பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுடனான இலங்கையின் நட்பை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல முயற்சி செய்வேன். இலங்கை வசம் உள்ள இந்திய மீனவர்களின் அனைத்துப் படகுகளும் விடுவிக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

இதனிடையே கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் திரண்ட மதிமுகவினர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை டெல்லி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Related Posts

error: Content is protected !!