சைக்கிள் ஓட்டக் கத்துக்கங்க! -இளைஞர்களுக்கு மோடி அறிவுரை!
மாறி வரும் காலத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது மோடி பேசியது இதுதான்:-
இன்று உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கொரோனா பேரிடர் காலத்தில் நமது வேலை வாய்ப்புகளும், அதனை செய்யும் முறையும் மாற்றம் கண்டுள்ளது. இதனால், புதிய தொழில்நுட்பங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சமயங்களில் இளைஞர்கள் புதிய திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.
திறன் என்பது நமக்கு நாமே அளிக்கும் ஒரு பரிசு. அது அனுபவத்தின் மூலம்தான் வளர்கிறது. திறனுக்கு எந்த காலமும் கிடையாது, காலம் செல்ல செல்ல திறன் வளர்ந்து கொண்டே இருக்கும். திறன் என்பது தனித்துவம் மிக்கது, அது பிறரிடம் இருந்து உங்களை தனித்துக் காட்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் சம்பாதிக்க மட்டுமே திறனைப் பயன்படுத்தக் கூடாது. வேலை வாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்கில் இந்தியா[spacing
மேலும் சிலர் எப்போதுமே அறிவையும் திறனையும் குழப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு நான் அது குறித்து விளக்குகிறேன், அதாவது சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று புத்தகம் மூலம் படிப்பதும், இணையதளத்தில் பார்ப்பதும் அறிவை வளர்க்கும். ஆனால் இதை எல்லாம் செய்வதால் நீங்கள் சைக்கிளை ஓட்ட முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது, உண்மையிலேயே நீங்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால் அதற்கு உங்களுக்கு திறன் இருக்க வேண்டும் என்று மோடி கூறினார்.
Skill is timeless.
Skill is unique.
Skill is a treasure that nobody can take away.
Skill is self-reliance, it not only makes one employable but also self-employable. #5YearsofSkillIndia pic.twitter.com/1DxjvNsEfr
— Narendra Modi (@narendramodi) July 15, 2020
இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயற்சி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.