ஹெல்மெட் போடாம பைக்கில் போன பிரதமருக்கு ஃபைன்! – கம்போடியா நியூஸ்

ஹெல்மெட் போடாம பைக்கில் போன பிரதமருக்கு ஃபைன்! – கம்போடியா நியூஸ்

கம்போடியா என்றவுடன் ஏதோ வேற்று நாடு என்று நினைக்க வேண்டாம். நம்முடைய வரலாற்றில்  கிட்டத்தட்ட 600 வருட (600 – 1200) தமிழரின் வரலாறு அங்கு இருக்கிறது. ஆம் தமிழர்களுக்கும் கம்போடியாவுக்கும் நிறைய தொடர்புண்டு. மேலும் நிறைய வியப்பும் உண்டு.சைவ மற்றும் வைணவ மதம் இருந்த காலத்தில் பல்லவர்கள் கட்டிய மாபெரும் கோவில் தான் இங்குதான் இருக்கிறது என்பது தெரிந்திருக்கும்.

compo pm

அது மட்டுமின்றி நம் தமிழ் நாட்டு போலவே கம்போடியா நாட்டில் ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. விதியை மீறி ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை யார் ஓட்டினாலும், அபராதம் விதிப்பது வழக்கம்.
இந்த நிலையில் அந்த நாட்டின் பிரதமரும், கம்போடிய மக்கள் கட்சி தலைவருமான ஹூன் சென் (வயது 63), ஹெல்மட் அணியாமல் கோ காங் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி மாட்டிக்கொண்டார்.

இது தொடர்பாக அவரை பிடித்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி அவருக்கு 3¾ அமெரிக்க டாலர் (சுமார் ரூ.265) அபராதம் விதித்து அதற்கான நோட்டீசை அளித்தார். அதுமட்டுமின்றி அவரிடம், “நீங்கள் நாம்பென் (தலைநகர்) சென்று, இந்த அபராதத்தை கட்ட வேண்டும்” என கூறினார்.

இதுகுறித்து ‘பேஸ்புக்’ வலைத்தளத்தில் ஹூன் சென் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், “நான் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்துவேன்” என கூறி உள்ளார்.அத்துடன் தனது தவறுக்காக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!