சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
மஹாராஷ்டிரா மற்றும் கோவா சார்பில் மும்பையில் நடந்த வழக்கறிஞர்கள் சங்கம் நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசும்போது, எல்லா தீர்ப்புகளையும் மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவதற்கு ஆதரவாக பேசியிருந்தார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் இந்த பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பதிவிட்டுள்ள சேதியில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மாநில மொழிகளில் கிடைக்க செய்வதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, சந்திரசூட் பேசினார். இதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என ஆலோசனைகளை கூறியுள்ளார். இது பாராட்டத்தக்க முயற்சி. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் பயனடைவர் என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பகிர்வில், இந்தியாவில் ஏராளமான மொழிகள் உள்ளன. அவை நமது கலாசாரத்திற்கு துடிப்பை ஏற்படுத்துகிறது. பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பாடங்களை ஒருவர், அவரது தாய்மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளில் படிப்பதை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் தெரிவி6த்திருந்தார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் பிரதமர் மோடியின் பதிவை இணைத்து பதிவிட்டு ,. அனைத்து இந்திய மொழிகளிலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற மாண்புமிகு தலைமை நீதிபதியின் ஆலோசனையை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இது ஐகோர்ட்களில் மாநில அலுவல் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற நமது நீண்டகாலக் கோரிக்கையுடன், நமது நாட்டின் சாமானிய மக்களுக்கு நீதியை நெருங்கச் செய்யும் என தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…
பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…
நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…
இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…
இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…
This website uses cookies.