உங்க பேங்க் அக்கவுண்ட்டை மிஸ்யூஸ் பண்ணி இருக்காங்களா-ன்னு செக் பண்ணியாச்சா?

உங்க பேங்க் அக்கவுண்ட்டை மிஸ்யூஸ் பண்ணி இருக்காங்களா-ன்னு செக்  பண்ணியாச்சா?

மோடியில் திடீர் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் சேமிப்புக் கணக்கில் ரூ.2.5 லட்சம் ரொக்கத்துக்கு மேலாக டெபாசிட் செய்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இவ் விதம் சேமிப்புக் கணக்கில் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டு களை டெபாசிட் செய்தவர்களின் இணையதள முகவரி அல்லது அவர் களது செல்போனுக்கு தகவல்களும், குறுஞ்செய்திகளும் (எஸ்எம்எஸ்) அனுப்பப்படுகின்றன. எவரெவர் கணக்கில் கூடுதல் தொகை செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை வருமான வரித்துறை இணையதள முகவரிக்குச் சென்றும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: www.incometaxindiaefiling.gov.in

it feb 16

ஒருவேளை உங்கள் கணக்கில் நீங்கள் கூடுதலாக செலுத்தியிருந்தால் இணையதள முகவரிக்குச் சென்று வரித் தாக்கல் செய்து தொடர் நடவடிக்கையி லிருந்து தப்பிக்க முடியும். வருமான வரித்துறையினர் அடுத்த 10 நாள்களில் இது தொடர்பான விளக் கத்தை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி விவரம் கேட்க உள்ளனர். வருமானத்துக்குப் பொருந்தாத வகை யில் பணம் டெபாசிட் செய்யப்பட் டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் எந்த அளவுக்கு அபராதம் அல்லது தண்டனை என்ற விவரத்தை வருமான வரித்துறை இதுவரை தெரிவிக்கவில்லை.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

கடந்த சில ஆண்டுகளாக பெரும் பாலும் வருமான வரி கணக்குத் தாக்கல் ஆன்லைன் மூலமாகத்தான் நடைபெறு கிறது. இ-ஃபைலிங் தளத்திற்குச் சென்று வருமான வரி கணக்கை தனி நபராகவோ அல்லது தணிக்கையாளர் மூலமோ தாக்கல் செய்யலாம். நீங்கள் நேரடியாக தாக்கல் செய்வதாயிருந்தால் உங்களது அடையாள எண், சங்கேத எண் ஆகியவற்றின் உதவியோடு வரி கணக்கு விவரத்தை தாக்கல் செய்யலாம். ஆடிட்டர் உதவியோடு மேற்கொண்டிருப்பின் அவர்களுக்கு இதுபற்றிய விவரம் தெரியும்.

ஒரு வேளை உங்களுக்கு எவ்வித தகவலோ அல்லது குறுஞ்செய்தியோ வராவிட்டாலும் நீங்கள் உங்கள் வருமான வரி இணையதளத்துக்குச் சென்று உங்கள் கணக்கில் ஏதேனும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். ஏனெனில் நீங்கள் அளித்திருக்கும் பழைய இமெயில் முகவரிக்கு தகவல் சென்றிருக்கலாம். அல்லது மொபைல் எண்ணை நீங்கள் மாற்றியிருக்கக் கூடும். எனவே உங்களுக்கு கணக்கு பற்றிய விவரத்தை இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்வது அனாவசிய பிரச்சினையைத் தவிர்க்க உதவும்.

இதுவரை வருமான வரித்துறை கணக்கு தொடங்கவில்லையெனில், இந்த இணையதளத்துக்குச் சென்று புதிய கணக்கு தொடங்கி பார்ப்பது நல்லது. உங்கள் வருமானமும், பண மதிப்பு நீக்கத்தின் போது நீங்கள் டெபாசிட் செய்த தொகையும் சரிவர இருப் பதை அவர்கள் ஏற்றுக் கொண்டதையும் இணையதளத்தில் பார்க்க முடியும்.

ஒருவேளை நீங்கள் டெபாசிட் செய்த தொகை தவறுதலாக உங்கள் பான் எண் கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால் அந்த விவரத்தை நீங்கள் முன்கூட்டியே தெரிந்து அதை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு விளக்கவும் வாய்ப்பாக அமையும். ஒருவேளை உங்கள் கணக்கில் அளிக்கப்பட்டுள்ள விவரம் சரியாக இருப்பின் நீங்கள் டெபாசிட் செய்த தொகை, அது எந்த வழியில் வந்தது என்ற விவரத்தை அளிக்க வேண்டும். நீங்கள் டெபாசிட் செய்த தொகையை பிரமதரின் கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாயிருப்பின் அது பற்றிய விவரத்தை அளிக்க வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு இதில் ஏதேனும் முறையீடு இருப்பின் நீங்கள் இணையதள முகவரி [email protected] என்ற தளத்தில் விவ ரங்களை பதிவு செய்யலாம். அல்லது தொலைபேசி எண் 1800 4250 0025-ல் தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

இதில் முக்கியமான நல்ல விஷயம் என்னவெனில் அனைத்துமே ஆன்லைன் மூலமான நடைமுறை என்பதுதான். இதை வருமான வரித் துறை குறுக்கீடு அற்ற மின்னணு முறை பரிசீலனை என்றே குறிப்பிட்டுள்ளது. இதனால் எந்த வருமான வரி அலுவல கத்துக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மனிதர்களின் குறுக்கீடுகளும் கிடையாது. வரித்துறை மீது எவ்வித அச்சமும், பய உணர்வும் இருக்கக் கூடாது என்பதற்காக இத்தகைய நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந் தாலும் நீங்கள் அளிக்கும் பதிலோடு இந்த விவகாரம் முடிந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. ஒருவேளை நீங்கள் அளித்த விவரங்கள் திருப்தியாக இல்லையெனில் உங்களிடம் மேலும் விசாரணை நடத்த வரித்துறை அதி காரிகளுக்கு அதிகாரம் உண்டு. நீங்கள் தொடர்ந்து கண்காணிப்பில்தான் இருப் பீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

Related Posts

error: Content is protected !!