January 28, 2022

பிரான்மலை – திரை விமர்சனம்!

கடந்த சில வருடங்களாகவே நம் நாட்டில் கௌரவக்கொலை, ஆணவக்கொலை என்ற வார்த்தை கள் அதிகமாக பிரயோகிக்கும் போக்கு நிலவுகிறது. இத்தகைய கொலைகள் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிய அடிப்படையில்தான் நடைபெறுகிறது.  இந்தியாவில் 1990களுக்கு முன்பு வரை கௌரவக் கொலைகள் குறித்து காவல் நிலையத்திலோ, நீதிமன்றங்களிலோ வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை. 1990க்கு பின்னர் பெண்களின் கல்வி, சமூக உணர்வு, தன்னிலை எழுச்சி காரணமாக இங்கு நடைபெறும் அனைத்து அநியாயங்களுக்கும் பெண்கள் பெண்கள் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். இதையடுத்து தற்போது இந்தியாவில் 22 மாநிலங்களில் ஆவணக் கொலைக்ள பல்வேறு வடிவங்களின் காவல்துறை, நீதிமன்றத்திற்கு வராமல் நடைபெற்று வருகிறது. வழக்கு களாக பதிவு செய்யப்படும் கொலைகள் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 1000 அதிகமாக உள்ளதாக வும் அறியப்படுகிறது. அதே சமயம் இத்தகைய கொலை, ஜாதி, சொந்தம் என்ற வலைப் பின்னல் பற்றி அவ்வப்போது தமிழ் சினிமாவில் வந்து போய் கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் இவ்வருடத்தில் கடைசியில் வந்திருக்கும் சின்னப் பட்ஜெட் படம்தான் பிரான்மலை.

இயக்குநர் அகரம் காமுரா உருவாக்கிய பிரான்மலை என்னும் ஊரில் பெரிய மனிதராக இருக்கும் வேல ராமமூர்த்தியின் மகன் வர்மன்தான் ஹீரோ. வயசுக்கு தகுந்தாற் போல் வெட்டியாக பொழுதை போக்கும் போது ஒரு அநாதைப் பெண் -நேகா (ஹீரோயினை) பார்த்து லவ் விட்டுக் கொண்டிருக்கிறார். அதே சமயம் மகா திமிருடன், மனிதாபிமானமே இல்லாமல் அளப்பரிய செல்வாக்குடன் இருக்கு பெரிசு வேல ராம மூர்த்திக்கு வெட்டியாய் இருக்கும் மகன் மீது கவலை. அதனால், அவரை கரூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால், மகன் வர்மனோ அங்கே செல்லாமல் கோயமுத்தூர் சென்று பிளாக் பாண்டியின் நட்பில் காலத்தைக் கழிக்கிறார்.

அங்கே தான் ஊரில் லவ்விய நேகாவை மருபடியும் மீட் பண்ணிய நிலையில் வழக்கம் போல் ஃபாலோ பண்ணி ,வழக்கம் போல் வர்மனைக் காதலிக்க ஆரம்பிக்க வைத்து விடுகிறார்கள். இதனிடையே நேகா தங்கியிருக்கும் விடுதியில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலை நேகாவின் மூலம் அறியும் வர்மன், போலீஸிடம் போட்டுக் கொடுத்து விடுதி நிர்வாகியை ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறார். இதன் பின் நேகாவும், வர்மனும் ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இப்போதான் ஆரம்ப பேராவில் சொல்ல ஜாதி ஆணவ சமாச்சாரம் வருகிறது. முன்னரே ஹீரோ அவரது காதல் தெரிந்த வேல ராமமூர்த்தியும், அவரது உறவினர்களும் கடுப்பில் இருக்க, இந்தத் திருமணச்செய்தி அவர்களை மேலும் கோபத்துக்கு உள்ளாக்குகிறது. இன்னொரு பக்கம் வர்மனும், நேகாவும் ஜெயிலுக்கு அனுப்பிய விடுதி நிர்வாகியும் வெளியே வர, நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு என்ற நிலையில் இருவரும் என்ன ஆனார்கள் என்பதுதான் மிச்சக் கதை.

ஒரு புதுமுகத்துக்கு தேவையான அத்தனை அம்மாஞ்சி தனமும் கொண்டவர் வர்மன். இப்படத்தில் சின்ன புள்ளத்தனமாய் குழந்தைகளுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்றும், அப்பாவைக் கண்டு பயம், கூடவே வில்லன்களை எதிர் கொள்வது என்று தேவையான நடிப்பை வழங்குபவர் கிளைமாக்ஸில் கைத்தட்டலே வாங்கி விடுவதுதான் சிறப்பு. இந்த தம்பி டாப் டைரக்டர்களிடம் சிக்கினால் ஜொலிப்பார் என்பது நிஜம்.

ஹீரோயின் நேகாவுக்கும் இதுதான் முதல் படம்தான், அழகான முக அமைப்பு கொண்ட இவருக்கு நடிக்க வாய்ப்பு குறைச்சல் ஆனாலும் கிளைமாக்ஸில் மெளமானமா இருந்தே தனிக் கவனம் பெருகிறார்..

தெனாவெட்டு ஜாதி ரோலுக்கெனவே பிறந்தவர் போல் வேல ராமமூர்த்தி.. இதே டைப்பிலான கேரக்டரில் இவரை இன்னும் எத்தனைப் படங்களில் பார்த்து தொலையணுமோ? என்று சலிப்பாக இருக்கிறது. ஆனலும் இவர் கிளைமாக்சில் மகனை கொன்றுவிடலாம் என்று சொல்லும் மைத்துனரை கோபத்துடன் உதைத்து பேசும் போது அடடே சொல்ல வைக்கிறார்.

அவரது உறவினர்களாக வரும் நடிக, நடிகையரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அதிலும் நாயகனின் சித்தி, கிளமாக்ஸில் வரும் பாட்டி மனதில் அஹா.. ஓஹோ.. பேஷ்..பேஷ்!

டாப் ஹீரோக்களின்ஒளிப்பதிவாளரான எஸ்.மூர்த்தியின் ஒளிப்பதிவும், புதுமுக மியூசிக் டைரக்டர் பாரதி விஷ்கரின் இசையும் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன.

பிளாக்பாண்டி, கஞ்சா கருப்பு காமெடி உதவவில்லை.

நவீனமயமானாலும் காதலில் ஜாதிதான் வில்லன் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார்கள்

மொத்தத்தில் பிரான்மலை – பார்க்கத் தகுந்தப் படம்

மார்க் 2.75 / 5