April 13, 2021

எங்களுடைய மருந்து கொரோனா வைரசை தடுப்பதில் 90% பலன் !அமெரிக்க & ஜெர்மனி மருந்து நிறுவனங்கள் அறிவிப்பு!

அமெரிக்காவில் உள்ள பிஜெர் என்ற மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பையோஎன்டெக் மருந்து நிறுவனமும் தங்களுடைய மருந்து கொரோனா வைரசை தடுப்பதில் 90% பலன் கிடைத்துள்ளது என அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 5 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.

ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. இந்த தடுப்பூசியின் முதல் 2 கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.

ஜூலை 27-ம் தேதி 3-ம் கட்ட பரிசோதனைகள் தொடங்கியது. இந்த பரிசோதனையில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மொத்தம் 43 ஆயிரத்து 538 பேர் தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் நேற்றுவரை மொத்தம் 38 ஆயிரத்து 955 பேருக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.மேலும், இந்த தடுப்பூசியால் மிகப்பெரிய பக்கவிளைவுகள் ஏற்படவில்லை. கொரோனா பரவலை 90 சதவீதத்திற்கு அதிகமான அளவில் தடுக்கிறது.” என்று தெரிவித்து உள்ளது

மேலும் தங்களால் 130 கோடி டோஸ் மருந்து உற்பத்தி செய்ய முடியும் என இந்நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. இந்த தடுப்பு மருந்துகளை வரும் 2021ம் ஆண்டு இறுதி வரை 65 கோடி மக்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஏறக் குறைய 8 மாதங்களுக்கு மேலாக இந்த நூற்றாண்டில் கோடிக்கணக்கானோரை பாதித்துள்ள வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஜான்சன் அண்டு ஜான்சன், அஸ்திரா ஜெனிகா உள்ளிட்ட மருந்து நிறுவனங்களும் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.