பேடிஎம் (Paytm) சேவைக்கு இனி இன் டர்நெட் தேவையில்லை

பேடிஎம் (Paytm) சேவைக்கு இனி இன் டர்நெட் தேவையில்லை

மொபைல் ரீசார்ஜ், கால் டாக்ஸி, பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நேரடி பண பரிவர்த்தனை இல்லாமல், டிஜிட்டல் அதாவது போன் மூலமாகவே செய்யகூடிய ஆப் பேடிஎம்..

paytm dec 8

இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள இந்த பேடிஎம், தற்போது இண்டர்நெட் இல்லாமலே வேலை செய்யும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக கட்டனம் இல்லாத அழைப்பு எண் ஒன்றை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த நம்பரை பயன்படுத்தி இண்டர்நெட் இணைப்பு இல்லாதவர்களும் இனி பேடிஎம் சேவையை பயன்படுத்தலாம்.

அதன்படி படி, அந்நிறுவனம் அறிவித்துள்ள கட்டணம் இல்லாத எண்ணான, 180018001234-ஐ டயல் செய்து பேடிஎம் சேவைகளை பயன்படுத்த முடியும். இண்டர்நெட் இணைப்பு கோளாறாக இருப்பது மற்றும் அடிக்கடி இணைப்பு துண்டிக்கப்படும் போது பயனர்கள் இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு பேடிஎம் சேவைகளை பயன்படுத்த முடியும். பேடிஎம் கட்டணமில்லா எண் சேவையை பயனர்கள் மற்றும் விற்பனையாளர்களும் பயன்படுத்த முடியும். புதிய கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பு விடுத்து பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.

நாடெங்கும் வங்கி மற்றும் எடிஎம் மையங்களில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் நிலையில் டிஜிட்டல் முறையில் பயனர்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்க இத்திட்டம் வழி செய்யும். ஏற்கனவே பேடிஎம் சேவைக்கு பதிவு செய்திருக்கும் பயனர்கள், இந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்து தங்களின் மொபைல் நம்பர் பதிவு செய்து நான்கு இலக்கு கடவுச்சொல் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஸ்மார்போன் இல்லாதவர்கள் கூட இனி, பேடிஎம் சேவையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!