பொதுத் தேர்தலில் மாற்றம் வேண்டும்! – கருத்தரங்கு

பொதுத் தேர்தலில் மாற்றம் வேண்டும்! – கருத்தரங்கு

தேர்தல் விவகாரங்கள் தொடர்பான பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ”தற்போதுள்ள நாடாளுமன்ற மக்களவை இடங்கள் 1971-ம் ஆண்டின் மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 55 ஆண்டுகளில் மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதற்கு ஏற்றாற்போல, மக்களவையின் இடங்களை அதிகரிக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்தின் 42 -வது திருத்தத்தின் மூலம் 1971-ம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாகவைத்து தொகுதிகளை வரையறை செய்தனர். 2001-ம் ஆண்டில் 84-வது சட்டத்திருத்தத்தின் மூலமாக அதேநிலையை 2026-ம் ஆண்டு வரை நீடிக்கச் செய்தனர்.

17862381_1044808155619165_7504786383951061513_n

மேலும் நாடாளுமன்றம் விவாதிக்கின்ற இடமல்ல; முடிவுகளை எடுக்கின்ற இடம். தேவையான நேரத்தில் தேவையான தேர்தல் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். இப்போதைய சூழ்நிலையில், மக்களுக்கும் அரசமைப்பு சட்டத்துக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், தேர்தல் சீர்திருத்தங்களை உடனே செய்ய வேண்டும். தற்போதைய தேர்தல் அமைப்பு செயல்படுவதில் உள்ள குறைகளை உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காமல் அலசி ஆராய வேண்டும். அது காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப நமது நாட்டுக்கு அவசியம்” என்றார்.

நீதிபதி தீபக் மிஸ்ரா, கூறும்போது, “தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தலில் நிற்பது ஏதோ முதலீடு அல்ல என்பதை வேட்பாளர்கள் தங்கள் மனதில் இருத்திக் கொள்வது நல்லது. தேர்தல்களை நடத்துவது என்பது குற்றங்களுக்கு வழிவகை செய்யக் கூடாது, மக்கள் வேட்பாளர்களை அற மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டுமே தவிர போட்டி ரீதியான அனுகூலமின்மைகளை வைத்து வாக்களிப்பதை தீர்மானிக்கக் கூடாது, வாக்காளர் எந்த ஆசைக்காட்டுதலுக்கும் பணியாமல் வாக்குச்சாவடிக்குச் செல்லும் நாள் ஜனநாயகத்திற்கு சிறந்த நாள்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறும்போது, “இப்போதெல்லாம் தேர்தல் அறிக்கை என்பது வெற்றுக் காகிதங்களாகி வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகளை பொறுப்பாக்க வேண்டும், அரசியல் கட்சிகள் தங்கள் பொறுப்புகளை உணரச் செய்ய வேண்டும்” என்றார். அதிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்சினரிடம் கருத்து ஒருமித்தல் இல்லை என்ற ‘நாணங்கெட்ட’ சாக்குப்போக்குகளைக் கூறுவது வழக்கமாகி வருகின்றன. குடிமக்கள் மறதி காரணமாக தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் ஆட்சி அமைத்தவுடன் மறந்து விடுகின்றனர் ஆனால் கட்சிகளைத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற பொறுப்பாளிகளாக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் 2014 தேர்தலின் போது அரசியல் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் ஒன்று கூட தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கும் நலிவுற்றோருக்கான சமூக-பொருளாதார நீதியை உத்தரவாதம் செய்யும் அரசியல் சாசன லட்சியத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தவேயில்லை.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி இந்திய தேர்தல் ஆணையம் இலவசங்களுக்கு எதிராக திட்டங்களை வகுத்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறை மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்று சொன்னார் நீதிபதி கேஹர்.

Related Posts

error: Content is protected !!