பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்

பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்

நாம் குடும்பத்தோடு அடிக்கடி டூர் போய் இருப்போம். அப்படி போன ஊர் அல்லது நாட்டில் ஓரிரு ட்ரிப் மட்டும் மனசை விட்டு அகலாத நிலையில் மறுபடியும் அதே இடம் செல்ல ஆசைப் படுவோமில்லையா? அது போல் ‘ஏ1’ படத்தின் ஏகோபித்த ஆதரவை அடுத்து சந்தானம்- ஜான் சன் கூட்டணி இணைந்துள்ள இரண்டாவது படம் பாரிஸ் ஜெயராஜ். என்னவொன்று அதே ஏ 1 பார்முலா கதை என்பதுதான் போர் என்றாலும் கிச்சு கிச்சு மூட்டுவது மட்டுமே நோக்கம் என்பதால் அதில் ஜெயித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

வட சென்னையில் வளர்ச்சி அடைந்த கானா பாடகர் சந்தானம். யூ டியூப் பிரபலான இவரின் முதல் காதல் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து கண்ணில் பட்ட அனைகா-வை லவ் செய்ய ஆரம்பிக்கிறார். முதலில் இந்தக் காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் சந்தானத்தின் அப்பா (பிருத்விராஜ்), திடீரென எதிர்ப்புத் தெரிவிக்கிறார். இந்த எதிர்ப்பு ஏன்? இதைமீறி ஜோடி இணைந்தது எப்படி என்பதுதான் கதை.

கானா ராஜா-வா வரும் சந்தானம் தன் பாணியில் பஞ்ச் பேசி ரசிக்க வைத்துள்ளார். ஆனால் இவர் ஸ்டைலிலேயே ஹீரோவின் அப்பா, வில்லன், டிரைவர், அடியாள், பொடியாள் என்று அம்புட்டு பேரும் பேசும் பஞ்சால் திகட்டல் ஏற்படுகிறது. அத்துடன் ஹீரோவாக ஆறெழு படங்கள் ஆன நிலையிலும் தன் மாடுலேசன் மட்டுமே தன்னை ஒப்பேற்று வருகிறது என்பதிஅ சந்தான புரிந்து கொள்ள வேண்டும்

நாயகி அனைகா சோதி கொடுக்கப்ப்பட்ட ரோலை உணர்ந்து மிகச் சரியாக வந்து போகிறார். சந்தானத்தின் அப்பாவாக வரும் தெலுங்கு ஆக்டர் மாருதியால் சந்தானத்தின் ஹீரோயிசமே தப்பிக்கிறது. அதிலும் இரண்டாம் பாதியில் இவரின் பர்ஃபாமென்ஸ் பக்கா. கூடவே சந்தானத்தின் நிலையை வித்வான்களான மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், டைகர் கார்டன் தங்கதுரை நடிகர் கணேஷ், லொள்ளுசபா சேசு ஆகியோரும் சந்தானம் பாணியில் வளர முயன்றுள்ளார்கள்

சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு பாடல் மட்டுமே முணுக்க முணுக்கை வைத்தது ஆனால் பின்னணி இசை எடுபடவில்லை. ஆர்தர் வில்சன் கேமரா குளிர்ச்சி..

மொத்தத்தில் டைம் பாஸ் செய்ய விரும்புவோர் பார்க்கத் தகுந்தப் படம்தான்

மார்க் 3/5

error: Content is protected !!