March 26, 2023

2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல்: திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் லிஸ்ட் ரிலீஸ்!

2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் அனல் விடத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சியும் இதற்காக தங்களுடைய பணிகளைத் துவங்கிவிட்டன. ஆளும் பாஜக, பாரம்பரிய காங்கிரஸ், தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக என அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கின்றன. அந்த வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு, திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், 2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தொகுதி களுக்கு திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கழகத்தின் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ள பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல்:

* புதுவை – முனைவர் சபாபதிமோகன், பரணி கே.மணி

* சென்னை வடக்கு- இ.கருணாநிதி, சி.எச்.சேகர்

* சென்னை தெற்கு- ஆர்.டி.சேகர், சி.வி.எம்.பி.எழிலரசன்

* சென்னை மத்திய- எஸ்.ஆர்.ராஜா, வி.ஜி.ராஜேந்திரன்

* திருவள்ளூர்- மு.சண்முகம், ப.ரங்கநாதன்

* ஸ்ரீபெரும்புதூர்- அசன் முகம்மது ஜின்னா, காசி முத்துமாணிக்கம்

* காஞ்சிபுரம்- கே.பி.பி.சாமி, ப. தாயகம் கவி

* சேலம்- ஆர்.மாசிலாமணி., வி.சி.சந்திரகுமார்

* நாமக்கல்- பொங்கலூர் நா. பழனிசாமி, எஸ்.ஆர்.பார்த்திபன்

* ஈரோடு- கே. இராமச்சந்திரன், கே.எஸ். இராதாகிருஷ்ணன்

* திருப்பூர்- எம்.சின்னசாமி, எம்.திராவிடமணி

* நீலகிரி- டி.ஆர்.பி.ராஜா, ஆர்.ஜெயராமகிருஷ்ணன்

* கோயம்புத்தூர்- வ.முல்லைவேந்தன் மகேஷ் பொய்யாமொழி

* பொள்ளாச்சி- கே.பி.ராமலிங்கம், ஆர்.கிரிராஜன்

* அரக்கோணம்- கே.எஸ். இரவிச்சந்திரன், எஸ். அரவிந்த் ரமேஷ்

* வேலூர்- டாக்டர் த. மஸ்தான், ஜே.எல்.ஈஸ்வரப்பன்

* கிருஷ்ணகிரி- எம்.பி.கிரி, வேலூர் கார்த்திகேயன்

* தர்மபுரி- கு.பிச்சாண்டி, எஸ்.அம்பேத்குமார்

* திருவண்ணாமலை- இ.ஜி.சுகவனம், பி.முருகன்

* ஆரணி- வசந்தம் கார்த்திகேயன், இ.பரந்தாமன்

* விழுப்புரம்- பி.என்.பி.இன்பசேகரன், தமிழன் பிரசன்னா

* கள்ளக்குறிச்சி- வி.பி.துரைசாமி, ஏ.நல்லதம்பி

* திண்டுக்கல்- மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் கே.ஜே.சரவணன்

* கரூர்-சுப்புலட்சுமி ஜெகதீசன், சுபா. சந்திரசேகர்

* திருச்சிராப்பள்ளி- ஏ.கே.எஸ்.விஜயன், எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம்

* பெரம்பலூர்- டி.உதயசூரியன், நெல்லிக்குப்பம் புகழேந்தி

* கடலூர்- கோவி.செழியன், கும்பகோணம் க. அன்பழகன்

* சிதம்பரம்- சிவ.வீ.மெய்யநாதன் சபா ராஜேந்திரன்

* மயிலாடுதுறை- உ.மதிவாணன், துரை (இளைஞரணி)

* நாகப்பட்டினம்- எம்.ராமச்சந்திரன், துரை.கி.சரவணன்

* தஞ்சாவூர்- டி.எம்.செல்வகணபதி, கடலூர் இள. புகழேந்தி

* சிவகங்கை- பொன்.முத்துராமலிங்கம், எம்.அப்பாவு

* மதுரை- வி.சத்தியமூர்த்தி, வீ.கண்ணதாசன்

* தேனி- வீ. கருப்பசாமி பாண்டியன், எஸ்.ஜோயல்

* விருதுநகர்- பூங்கோதை ஆலடி அருணா, கம்பம் பெ. செல்வேந்திரன்

* ராமநாதபுரம்- இ.பெரியசாமி, வழக்கறிஞர் இரா.நீலகண்டன்

* தூத்துக்குடி- எஸ்.தங்கப்பாண்டியன், வழக்கறிஞர் மனுராஜ் சுந்தரம்

* தென்காசி- குழந்தை தமிழரசன், டி.பி.எம். மைதீன்கான்

* திருநெல்வேலி-எஸ்.ஆஸ்டின், குத்தாலம் பி.கல்யாணம்

* கன்னியாகுமரி-ஆர்.தாமரைசெல்வன், எஸ்.தங்கவேலு